யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ரணில்: பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதிபரின் பாதுகாப்பு பிரிவினர் தற்போதைக்கு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்து, அதிபரின் விஜயம் தொடர்பான பாதுகாப்பு நிலைமைகளை அவதானித்து வருகின்றனர்.

ரணிலின் யாழ். விஜயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகை தரும் அதிபர் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டிடம் ஒன்றை திறந்து வைத்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, யாழ்.போதனா வைத்தியசாலையிலும் (Teaching Hospital Jaffna) புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் ஒன்றை ரணில் திறந்து வைக்கவுள்ளார்.

மேலும் யாழ். விஜயத்தின் போது வலி வடக்கு பகுதியில் ஒட்டகப்புலத்துக்குச் செல்லும் பிரதான பாதையினையும் உத்தியோபூர்வமாக மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *