ஜேர்மனியில் உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த இருவர் குத்திக்கொலை- ரஸ்ய பிரஜை கைது.

உக்ரைன் படைவீரர்கள் இருவரை ஜேர்மனியில் ரஸ்ய பிரஜையொருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

ஜேர்மனியின் தென்பகுதியில் உள்ள வணிகவளாகமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேர்னோவ் என்ற நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கத்திக்குத்திற்கு இலக்கான 36 வயது அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் 28 வயது நபர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த இருவரும் ஜேர்மனியில் மருத்துவசிகிச்சை பெற்றுவந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றிலிருந்து ரஸ்யர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *