சீன மரதன் ஓட்டப் போட்டியில் தில்லுமுல்லு!

சீனாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெய்ஜிங் அரை மரதன் ஓட்டப் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த டெஜெனே ஹைலு பிகிலாவை விட ஒரு வினாடி முன்னேறி 1:03:44 நிமிடங்களில் வெற்றி பெற்றார் சீனாவின் ஹாய் ஜீ. இப்போட்டியில் கென்யாவைச் சேர்ந்த ராபர்ட் கெட்டர் மற்றும் வில்லி மனாங்காட் ஆகியோர் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர்.
எனினும் இப்போட்டியின் ஹாய் ஜீ வெற்றிபெற மூன்று ஆப்பிரிக்க ஓட்டப்பந்தய வீரர்கள் மெதுவாகச் சென்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பந்தயத்தின் முடிவின் காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்தபோது கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில் மூன்று ஓட்டப்பந்தய வீரர்கள் தங்கள் வேகத்தைக் குறைத்து, சீனாவின் மரதன் ஓட்டப்பந்தய வீரரை தங்களுக்கு முன்னால் செல்ல கைச் சைகை செய்து அனுமதியளிப்பதை காணக்கூடியதாய் இருந்தது.
உலக மேடையில் மரதன் ஓட்டப் போட்டியில் ஆபிரிக்க நாட்டு வீரர்களை வெல்லது அத்தனை இலகு அல்ல என்பது எல்லோரும்  அறிந்ததே.
இப்போது நான்கு ஓட்டப்பந்தய வீரர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவர்களது பதக்கங்களையும் பரிசுத் தொகையையும் திருப்பித் தரும்படி கேட்கப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *