பிரேசிலில் 20 சிதைந்த சடலங்களுடன் கரை ஒதுங்கிய படகு!

பிரேசிலின் பாரா மாநிலத்தில் இருந்து 185 மைல் தொலைவில் கரை ஒதுங்கிய சிறிய படகில் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி சுமார் 20 சிதைந்த சடலங்கள் இருந்ததாகவும், எனினும் அங்குள்ள மொத்த சடலங்களின் எண்ணிக்கையை வெளியிட முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், படகு எந்தப் பகுதியில் இருந்து வந்தது என்பது இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் குற்றவியல் மற்றும் சிவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சட்டமா அதிபர் அலுவலகத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி பிரேசில் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை 2021 ஆம் ஆண்டில், இறந்த உடல்களுடன் குறைந்தது ஏழு படகுகள் பிரேசில் மற்றும் கிழக்கு கரீபியனுக்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *