இந்தியா

சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு!

இந்தியின் பிரபல நடிகரான சல்மான் கான் வீட்டின் முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் பிரபலமான 3 கான் நடிகர்களில் ஒருவர் சல்மான்கான். மானை சுட்ட வழக்கில் சிறை சென்ற சல்மான்கான் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ரசிகரை அடித்தது, சாலையோரம் தூங்கியவர்கள் மீது காரை விட்டு ஏற்றியது என இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. சமீபத்தில் ரம்ஜானுக்கு சல்மான்கானுக்கு வாழ்த்து தெரிவிக்க ரசிகர்கள் குவிந்த நிலையில் போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில் தற்போது சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் சல்மான்கான் வீட்டின் முன்பு வந்த மர்ம நபர்கள் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, சல்மான்கான் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. சல்மான்கானுக்கு யாராவது கொலை மிரட்டல் விடுப்பதற்காக இவ்வாறு செய்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சம்பவம் மும்பையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *