செய்திகள்

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையுடனும் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல் அவிவில் உள்ள இலங்கைத் தூதுவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்படி, தேவையற்ற ஈடுபாடுகளுக்காக இலங்கையர்கள் தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்று பேஸ்புக் பதிவொன்றின் மூலம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பல்வேறு நோய்களுக்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளும் இலங்கையர்கள் ஏதேனும் அவசரகால சூழ்நிலைகள் உருவாகும் பட்சத்தில் நீண்ட காலத்திற்கு போதுமான மருந்துகளை வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் போதிய உணவு பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *