கவிதைகள்

“காகம் கட்டிய கூட்டில் குயில்” …. கவிதை …. முல்லைஅமுதன்.

மரம்
எந்தப் பறவையையும் நிராகரிப்பதில்லை.
காகம் கட்டிய கூட்டில் குயில்
குடியிருந்தபோதும் மௌனமாகவே அனுமதித்திருந்தது.
கிளையில் பூக்கும்
அனைத்தும் பல்வேறு அழகும் சேர்த்தே காட்சி தந்தன.
பூவாகியும்,காயாகிய பின்னரும் குருவிச்சையே என ஆகிய போது,
மரம் நச்சுமரம் என்கிறார்கள்.
குயிலின் கூடென
சொல்லிக்கொள்ளும் கூட
வளர்ந்த மரங்கள் செடிகளுடன் இணைந்து கூக்குரலிட்டன.
மரம் என்ன செய்யும்..
வேர்கள்களைச் சரிசெய்தபடி இன்று பூத்து நின்றது.
சூரியன் இப்போது நட்புடன் கிளையொன்றில் குந்திக்கொண்டது
நிரந்தரமாக..

முல்லைஅமுதன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *