கவிதைகள்

தீம் தரிகிட தீம் தரிகிட… வாழ்த்து கவிதை …. சங்கர சுப்பிரமணியன்.

 அக்கினிக்குகுஞ்சொன்றை நெருப்பாய்கண்டான் பாரதி
அக்கினிக்குஞ்சை இதழாய் கண்டார் பாஸ்கரன்
அதனை ஆங்கிடைக் காட்டில் பொந்திலே வைத்தான் பாரதி
இதனை ஈங்கிடை நெஞ்சில் பாந்தமாய் பதித்தார் பாஸ்கரன்
வெந்து தணிந்த காட்டினைக் கண்டான்
கவி பாரதி
பைந்தமிழ் கனிந்த ஏட்டினைத் தந்தார்
யாழ் பாஸ்கரன்
அங்கே குஞ்சென்றும் மூப்பென்றும் வீரத்தில்
காணவில்லை பாரதி
இங்கே இளையோர் பெரியோரென வாசிப்பில் காணவில்லை பாஸ்கரன்
தீம் தரிகிட  தீம் தரிகிட என்றே ஆனந்தக் கூத்தாடினான் பாரதி
ஆம் நான் வென்றேன் ஆம் நான் வென்றேன்
என மகிழ்கிறார் பாஸ்கரன்!

சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *