கவிதைகள்

“தேர்” ….. கவிதை …. பொன்.பரமேஸ்.

பலகாலம் சிந்தித்து

அழகான தேரொன்றை

வளமோடு வாழ

வடிவமைத்தான்.

சிலகாலம் செல்ல

சில்லொன்று சிறிதென்றெண்ணி

கணப்பொழுதும் காத்திராது

கழற்றியே எறிந்து விட்டு

சில்லொன்று புதிதொன்று வாங்கி

பொருத்தியும் விட்டு விட்டான்.

வந்த சில்லோ மகாமட்டம்

கழற்றிய சில்லே

கணக்கான பொருத்தமென்று

தேடினான் ஓடினான்

சிந்தை கலங்கி நின்றான்

காணாது காத்திருந்தான்

காலம் கரைந்து விட்டது.

. …….. பொன்.பரமேஸ்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *