கவிதைகள்

“நதி அமைதியாக இன்னும் இருக்கிறது” …. கவிதை ….. முல்லைஅமுதன்.

தெளிந்திருந்த தண்ணீர் அமைதியாகத்தான் இன்றுமிருந்தது.காலம் காலமாகநதி என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.இதில் உட்கார்ந்தபடியே நெடு நாட்களாய்..நெடு நேரமாய்பேசிகொன்டிருந்த பொழுகளில் எல்லாம்..நதி பற்றித்தான் அதிகம் பேசியிருப்போம்.அந்த உரையாடலிலிருந்துதான்நேசிப்பாளனாய் என்னுள் எதையோ விதைத்தாய்.ஒருநாள் பேச்சோடு பேச்சாகமுத்தெடுக்க முனைவோம் என சொன்னதில் அவன் முந்திக்கொண்டான்.நதி இன்றும் அமைதியாய்த்தான் இருக்கிறது.அவன் கடைசியாகஎன்னருகில் வைத்துசென்றபுத்தகப்பை இன்னமும் நதியைப்பார்த்தபடி இருக்கிறது.என்னால் முத்தெடுக்க முடிவதில்லை..நதி அமைதியாக இன்னும் இருக்கிறது.

முல்லைஅமுதன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *