கவிதைகள்
“இன்று அவள்… நாளை”? …. கவிதை … முல்லைஅமுதன்.

நேற்றுமளிகைக்கடைக்குச் சென்றிருந்தேன்.இன்றுமனைவியுடன் நோயாளர் பகுதிக்குச் சென்றுவந்தேன்.நாளைஉடற்கூறுகளை கணினியில் கணிக்கும்மருத்துவக்கூடத்துச் செல்லும்படியாயிற்று.சலிப்பேதுமின்றி கூடவே வந்தாள் மனைவி.அவ்வப்போது எனது கொதிநிலையைஎப்படியோ சமாளித்து யாவர்க்கும் மனிதனாகநடமாடவைத்தித்திருந்தாள்.புரையோடிய நோய் தாக்கியதில் அவளுக்கு வருத்தம் அதிகமகவே இருந்தது.காட்டிக்கொள்ளவேயில்லை.விரைவில் இறந்துவிடலாம் என்றறிந்தும் புன்னகைத்தபடியேகூடவருவாள்.அப்பப்டித்தாந்மரியா என்கிற பெண்ணும் வருவதுண்டு..கூட வருபவன் கணவனா காதலனா என்றறியவில்லை..பேசியதில்லை.புன்னகையே நட்புமாக்கியது.அவ்வளவுதான்.அவள் இன்று இறந்துவிட்டதாகமருத்துவச்சி சொல்லிப்போனாள்.இன்று அவள்…நாளை…?

முல்லைஅமுதன்.
![]()