இலக்கியச்சோலை

Kilmisha Uthayaseelan இன் இறுதி வெற்றியின் இரகசியம்:

பாடகர் சிறீனிவாஸ்…

தன் முகநூல் பக்கத்தில் எழுதியதின் தமிழாக்கம்:

“கில்மிஷா உண்மையிலேயே வெற்றி பெற தகுதியானவர்.

மெல்லிசையும் ஆக்ரோஷமும் கலந்த அவருடைய பாடல் தேர்வுகள் இறுதிப் போட்டிக்கு கச்சிதமாக பொருத்தமானவை. மேலும் அவர் அதை முழு வீச்சுடனும், தன்னம்பிக்கையோடும் அழகாகவும் பாடினார்.

இறுதி வெற்றி கில்மிஷாக்கு கிடைத்தது என்பது மிகவும் சிறப்பான விடயம். ஏனென்றால் அவர் போரின் பாதிப்புக்குள்ளான இடத்தில் இருந்து வந்தவர். தனது இதயத்திற்கு நெருக்கமான ஒருவரை போரில் இழந்திருக்கிறார். அவருடைய வெற்றி அவருக்கு மட்டுமல்ல, போரினால் பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த இனத்துக்குமான வெற்றி.

அந்த வெற்றி அவளுடைய மக்கள் எல்லாருக்குமான ஆற்றுப்படுத்தலாக (Healing) மாறியுள்ளது. அந்த மக்களுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது போல் அவர்கள் அதைக் கொண்டாடுகிறார்கள்.

ஆம், அவள் தகுதியின் அடிப்படையில் வென்றாள், வேறு எந்த உணர்ச்சியிலும் அல்ல.

ஏனென்றால் உண்மைக்கு உணர்ச்சிகள் இல்லை.”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *