வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினை நாகபூசணிக்கு இன்று கொடியேற்றம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று (19.06.2023) திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி இரவு சப்பரதத் திருவிழாவும், மறுநாளான ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும், அடுத்த நாள் தீர்த்தத் திருவிழாவும் அன்று இரவு கொடியிறக்கமும் நடைபெறும்.

மேலும் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிரசித்தி பெற்ற தெப்போற்சவம் நடைபெறவுள்ளது.

ஆலயத் திருவிழாவையொட்டி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ஆலயத்துக்கு வருபவர்கள் கலாசார உடையணிந்து வருகை தருமாறு ஆலய நிர்வாகம் கேட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *