உலகின் நீளமான நாக்கு – கின்னஸ் சாதனை படைத்த நாய்

அமெரிக்காவில் லூசியானாவை சேர்ந்த ஜோயி என பெயரிடப்பட்ட லாப்ரடோர்- ஜெர்மன் ஷெப்பர்ட் கலவை கொண்ட நாய், மிக நீளமான நாக்குக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இந்த நாய்க்கு 12.7 சென்றி மீட்டர் நீளம் கொண்ட நாக்கு உள்ளது.

கால்நடை மருத்துவர் ஒருவர் அந்த நாயின் நாக்கு நீளத்தை அளந்ததை தொடர்ந்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பிஸ்பீ என்ற நாய் நீளமான நாக்கு கொண்டதாக சாதனை பட்டியலில் இருந்தது.

அதன் நாக்கு 9.49 சென்றி மீட்டர் இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஜோயி முறியடித்துள்ளது.

ஜோயி நாயின் உரிமையாளர்களான சாடி மற்றும் ட்ரூ வில்லியம்ஸ் ஆகியோர் இது குறித்து கருத்து வெளியிடுகையில்,

“ஜோயி 6 வாரமாக இருக்கும் போது நாங்கள் அதனை வாங்கினோம்.

குட்டியாக இருக்கும் போதே ஜோயின் நாக்கு வாயில் இருந்து அடிக்கடி வெளியேறும்.

அது இவ்வளவு நீளமாக வளரும் என்று நினைத்தோம். இப்போது சாதனை படைத்துள்ளது” என்றார்.

மேலும், ஜோயி பந்துகளை எடுப்பது, அணில்களை துரத்துவது, கார் சவாரி செல்வது, கால்வாயில் நீந்துவது போன்றவற்றை விரும்புவதாகவும் குளிப்பதை வெறுப்பதாகவும் அதன் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button