தலையில் அடிப்பட்ட சிறுவனுக்கு தையல் போடாமல் பெவிக்குவிக் தடவிய மருத்துவர்.!

கர்நாடகா மாநிலம் லிங்கசூகூரைச் சேர்ந்த வம்சி கிருஷ்ணா தன் 7 வயது மகன் மற்றும் மனைவியுடன் தெலங்கானா மாநிலம் அய்சாவுக்கு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றுள்ளார். அங்கு அந்த சிறுவன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து தலையில் அடிபட்டுள்ளது.

உடனடியாக வம்சி தன் மகனை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த மருத்துவர் அடிபட்ட தலையில் தையல் போடுவதை விட்டு விட்டு, உடைந்த பொருட்களை ஒட்டப் பயன்படும் ஃபெவிக்விக்கைத் தடவியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்ந்த பெற்றோர் மருத்துவமனையில் வாக்குவாதம் செய்யவே, நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்ததாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து போலீசில் புகாரளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அங்குள்ள மருத்துவர் மற்றும் உதவியாளர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும், சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button