முதல் சந்திப்பு: பல்துறை ஆற்றல் மிக்க கலா வித்தகி ஆனந்தராணி பாலேந்திரா முருகபூபதி
வேறு தேசங்களில் வாழ நேர்ந்தாலும், தமது ஆற்றல்களைவெளிப்படுத்திக்கொண்டேயிருப்பார்கள் என்பதற்கு மற்றும் ஒருஉதாரணமாகத்திழ்பவர் ஆனந்தராணி பாலேந்திரா.
இவரை 1970 களில் செல்வி ஆனந்தராணி இராஜரட்ணம் என்ற பெயருடன் முதல்முதலில் சந்தித்தது இலங்கை வானொலி கலையகத்தில்தான்.1970 – 1977 காலப்பகுதியில் இவர் பங்கேற்ற மேடை நாடகங்கள், நாட்டியநாடகங்கள், திரைப்படங்களில் இவரைப் பார்த்திருக்கின்றேன்.
நடன நர்த்தகி கார்த்திகா கணேசரின் நெறியாள்கையில் அரங்கேறிய எல்லார –காமினி நாட்டிய நாடகத்தில் கெமுனுவின் தாய் விகாரமாதேவியாகவும், கலைஞர்தாசீஸியஸின் பிச்சை வேண்டாம் நாடத்திலும், வாடைக்காற்று, கோமாளிகள்திரைப்படங்களில் முக்கிய நாயகியாகவும் பார்த்தேன்.
எனினும், நாம் மீண்டும் சந்தித்து எமது கலை, இலக்கிய, வானொலி ஊடகத்துறைநட்பை வளர்த்துக்கொண்டது புகலிடத்தில்தான்.இவரது கணவர் பாலேந்திராவை 1974 இல் சுஹேர் ஹமீட்டின் ஏணிப்படிகள்நாடகத்தில் பிரதான பாத்திரத்தில்தான் முதல் முதலில் பார்த்தேன்.
இவர்கள் இருவரையும் இல்லற வாழ்க்கையில் இணைத்தது, இந்திராபார்த்தசாரதியின் மழை நாடகம்தான்.இந்த நாடகத்திற்கென ஒரு அபூர்வ செய்தி இருப்பதாக எழுத்தாளர் இ. பா. அடிக்கடிசொல்வார். மழை நாடகத்தில் நடிக்கும் நாயகனும் நாயகியும் பின்னர் மணம் முடித்துஇல்லற வாழ்வினை தொடங்கிவிடுவார்களாம்.
ஆனந்தராணி – பாலேந்திராவுக்கும் இதுதான் நடந்தது.மிக நீண்ட இடைவெளிக்குப்பின்னர் 2008 இல் இங்கிலாந்திலும், அதன்பிறகு சிலவருடங்கள் கழித்து, அவுஸ்திரேலியாவிலும் இவர்களைச் சந்தித்தேன்.
ஆனந்தராணி, நாடகத் துறையில் 46 வருடங்களாக இயங்கி வரும் கலைஞர்.நாடக நடிகையாக மட்டுமன்றி சினிமா, வானொலி நடிகையாக, பரதநாட்டியஆசிரியையாக, தொலைக்காட்சி, வானொலி, மேடை அறிவிப்பாளராக தடம்பதித்தவர்.
பூர்வீகம் வல்வெட்டித்துறை. இளமைக் காலம் கொழும்பில். வெள்ளவத்தை சைவமங்கையர் கல்லூரி பழைய மாணவி. பிச்சை வேண்டாம் நாடகத்தில்பாலேந்திராவுடன் இணைந்து மேடை நாடகத்துறைக்கு அறிமுகமானவர். அப்போதுஇவருக்கு வயது 19.
க. பாலேந்திரா நெறிப்படுத்திய மழை நாடகத்திலிருந்து இற்றைவரையில் அவரின்நெறியாள்கையில் சுமார் 40 நாடகங்களில் முக்கிய பாத்திரங்கள் ஏற்றவர்.பல நாடகங்கள் பெண்களை மையமாகக் கொண்டவை. நடிப்பதற்கு சிக்கலானசவாலான நாடகங்களில் தனது நடிப்பாற்றலால் தான் ஏற்ற பாத்திரங்களுக்கு உயிர்ஊட்டியவர்.
அவை பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ளதுடன் பல விமர்சகர்களின்பாராட்டுதல்களையும் பெற்றது.குறிப்பிடத்தகுந்தவை: மரணத்துள் வாழ்வு, காத்திருப்பு, பிரத்தியேகக் காட்சி,ஆற்றைக் கடத்தல், திக்கற்ற ஓலம், சமூக விரோதி, கண்ணாடி வார்ப்புகள், மழை,நட்சத்திரவாசி , முகமில்லாத மனிதர்கள், துக்ளக், யுகதர்மம், ஒரு பாலை வீடு,கோடை, பிச்சை வேண்டாம்.
பாலேந்திராவினால் 1978 இல் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு தற்போதும்லண்டனில் இயங்கும் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினர்.இக் கழகத்தின் சுமார் 600 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் பங்கேற்றவர். இலங்கை,இந்தியா, இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா, நோர்வே, பிரான்ஸ், ஜேர்மனி,சுவிற்சர்லாந்து, , ஹொலண்ட் முதலான பல நாடுகளில் இந் நாடகங்கள்மேடையேறியுள்ளன.
லண்டனில் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் சிறுவர்களுக்கான தமிழ் நாடகப்பள்ளியை கணவர் பாலேந்திராவுடன் இணைந்து நடத்தி வருகிறார். சிறுவர் -இளையோர் நாடகங்களுக்கு உதவி நெறியாளராகவும் பணியாற்றும் இவர்,நாடகங்களில் வரும் நடன அசைவுகளையும் வடிவமைத்து நாடகப் பாடல்களையும்பாடி வருகிறார்.
தாயகம் வரும்வேளைகளில் கணவருடன் இணைந்து பல்கலைக்கழகங்கள்,பாடசாலைகள், சிறுவர் இல்லங்களில் நாடகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார்.
ரூபவாகினியில் ஒளிபரப்பான முதலாவது தமிழ் நாடகமான, பாலேந்திராநெறிப்படுத்தி, பி.விக்னேஸ்வரன் தயாரித்த கண்ணாடி வார்ப்புகள் (1982 )
நாடகத்தில் நடித்தவர். இந் நாடகம் பாலேந்திராவின் நெறியாள்கையில் மேடைநாடகமாக 1978 ஆம் ஆண்டு முதலில் மேடையேறியது.
1974 இல் இலங்கை வானொலியில் நாடக உரைச்சித்திரக் கலைஞராக இணைந்து1981 வரையில் நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களில் பிரதானபாத்திரங்களில் நடித்தவர்.
ஐரோப்பாவின் முதலாவது தமிழ் வானொலியான லண்டனைத் தளமாகக் கொண்டசன்றைஸ் வானொலியில் 15 வருட காலம் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித்தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். லண்டன் தீபம் தொலைக்காட்சியில் 14வருடங்கள் செய்தி வாசிப்பாளர் . தற்போது லண்டன் எஸ்.ஆர்.எஸ் தமிழ்வானொலியில் கதையாடல் நிகழ்ச்சியில் ஈழத்து எழுத்தாளர்களை அறிமுகம் செய்து,அவர்களின் சிறுகதைகளை வாசித்து வருவதுடன், ஈழத்து எழுத்தாளர்களின்கட்டுரைகளையும் வானொலிக்கு ஒலிவடிவில் வழங்கி வருகிறார்.
மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதிலும் தனித்துவம் மிக்கவர்.இதுவரையில் சுமார் 400 கலை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவைபெரும்பாலும் பல தர்ம ஸ்தாபனங்களுக்கான நிதியுதவி நிகழ்ச்சிகளாகும். 200அரங்கேற்ற நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
தாயகத்தில் கமலா ஜோன்பிள்ளை, கார்த்திகா கணேசர், ஸ்ரீகாந்தம் சகோதரிகளிடம்பரதநாட்டியம் பயின்று 1973 இல் நவரங்கஹல அரங்கில் தனது சகோதரிபாலராணியுடன் அரங்கேற்றம் நிகழ்த்தியதோடு, ஐம்பதுக்கும் மேற்பட்ட நடனநிகழ்ச்சிகளில் பங்குபற்றியுள்ளார்.
புலம்பெயர்ந்த பின்பு, லண்டனில் பிறென்ற் தமிழ்ப் பாடசாலையில், 14 வருடங்கள்நடன ஆசிரியராக பணியாற்றியவர்.
Srilankan Airlines விமானங்களில் முதன் முதலாக பல வருடங்கள் ஒலித்த தமிழ்அறிவிப்புக் குரலுக்கு சொந்தக்காரிதான் ஆனந்தராணி.வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் முன்னர் ஆசிரியராகப் பணியாற்றியஆனந்தராணி, லண்டனில் 32 வருடங்களாக அரசாங்க திணைக்களத்தில் நிர்வாகஉத்தியோகத்தராகப் பணி புரிந்து இளைப்பாறியுள்ளார்.
நூலக நிறுவனத்தின் ஆவணகம் ஒலிநூல் பிரிவிற்காக இதுவரை உயர்தரமாணவர்களுக்கான சுமார் 150 கட்டுரைகள், ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் 225இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை வாசித்து ஒலிப்பதிவு செய்து வழங்கியுள்ளார்.ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி இதழில் தனது நாடகஅனுபவங்களை எழுதி வருகிறார்.
ஆனந்தராணியின் கலைச்சேவைக்காக ஈழவர் திரைக்கலை மன்றத்தினரால்கலாவிநோதர் பட்டமும் சிவயோகம் அறக்கட்டளையினரால் கலையரசி பட்டமும்மற்றும் பிறென்ற் தமிழ்ச் சங்க விருது, பூபாளராகங்கள் விருது, தமிழினியின் விருது,
லண்டன் யூனிற்றி அமைப்பின் கலைப்புரவலர் விருது போன்றவை வழங்கப்பட்டுக்கௌரவிக்கப்பட்டிருப்பவர்.இனி, இந்தப்பதிவின் தொடக்கத்தை மீண்டும் படித்துப்பாருங்கள்.