முதல்வரின் வாழ்க்கை படமாக எடுக்க வேண்டும்- நடிகர் சூரி!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மதுரை திருப்பாலை மேனேந்தல் பகுதியில் அவரின் 70 ஆண்டு கால வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையில் புகைப்பட கண்காட்சி தொடங்கியுள்ளது.

கடந்த 19ம் தேதி தொடங்கிய முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சி 27ம் தேதி நடைபெற்று வருகிறது. இந்த புகைப்படக்கண்காட்சியை நகைச்சுவை நடிகர் சூரி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பார்வையிட வந்தனர்.

முன்னதாக புகைப்பட கண்காட்சியை பார்வையிட வந்த நடிகர் சூரி, அமைச்சர் ரரகுபதியை அமைச்சர் மூர்த்தி வரவேற்றார். புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70 ஆண்டுகால வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில் அவரது சிறுவயது படங்கள் முதல் தற்போது முதல்வராக பொறுப்பேற்று தொடங்கி வைத்துள்ள திட்டங்கள் வரையிலான பல்வேறு காலகட்ட புகைப்படங்களை நடிகர் சூரி பொறுமையாக பார்வையிட்டார்.

தொடர்ந்து மிசா காலகட்டத்தில் சிறையில் ஸ்டாலின் அனுபவித்த கொடுமைகளை காட்சிப்படுத்தும் அரங்கை உணர்ச்சிப்பூர்வமாக பார்வையிட்டார். தொடர்ந்து புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்டு கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் நடிகர் சூரியை கண்டதும் உற்சாகத்தில் கூச்சலிட்டனர். தொடர்ந்து அவரோடு கைகொடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button