சிஸ்டர் சிட்டி’ ஒப்பந்தம்: நித்தி சொல்வதென்ன?…
அமெரிக்காவின், 30 நகரங்களை ஏமாற்றியதாக வெளியான செய்தி குறித்து, நித்யானந்தாவின் கைலாசா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய நித்யானந்தா, நம் நாட்டை விட்டு தப்பிச் சென்றார். கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாகக் கூறும் அவர், பாஸ்போர்ட், கொடி உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தினார்.
மேலும், கைலாசாவை ஐ.நா., சபை அங்கீகரித்து விட்டதாகவும் கூறி வருகிறார். இதற்கிடையே, ‘சிஸ்டர் சிட்டி’ ஒப்பந்தம் என்ற பெயரில், அமெரிக்காவின், 30 நகரங்களை கைலாசா ஏமாற்றி விட்டதாக செய்தி வெளியானது.
இதையடுத்து, கைலாசா உடன் போடப்பட்ட ஒப்பந்தங்களை அமெரிக்க நிறுவனங்கள் ரத்து செய்தன. இந்நிலையில், இது தொடர்பாக கைலாசா தரப்பில் சமூக வலைதளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதில் கூறப்பட்டுஉள்ளதாவது: ஐ.நா., சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக நாங்கள் செயல்படுகிறோம். ஐரோப்பிய நாடான மால்டாவைப் போல், எல்லைகள் அற்ற, சேவை மனப்பான்மையுடன் கூடிய நாடாக கைலாசா செயல்பட்டு வருகிறது.
பல நாடுகளில் உள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள் மற்றும் கோவில்கள், மடாலயங்கள் வாயிலாக கைலாசா செயல்படுகிறது. நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()