கதைகள்

ஃஸ்பா.! …. சிறுகதை …. யாழ் எஸ் ராகவன் .

டேய் வைரவா ரொம்ப நேரம் அந்த அறையில் இருந்தாயாடா உனக்கு எப்படி இருந்துச்சு. மனசுக்கும் உடம்புக்கும் ஒரு புத்துணர்ச்சி கிடைச்சுதா சந்தோசம் வந்துச்சா.. நான் கொடுத்த காசு டிப்ஸா குடுத்துட்டியா அவங்க பேசுனது உனக்கு புரிஞ்சதா உன்னை நல்லா கவனிச்சாங்களா புதுமை இருந்ததா.. அங்கிருந்த எல்லாவற்றையும் விட உனக்கு வந்தவ சூப்பரா இருந்தா.பாஷ பெரிய பிரச்சினையா இருந்துச்சோ இந்த விஷயத்துக்கு எதுக்குடா பாஷ.

கௌதமும் கணேஷ் பாண்டியும் ரிஷிகேஷ் ரவியும் மாறிமாறியும் கேள்விகளை தொடுத்து கொண்டே வந்தனர் ஆனால் எல்லாரின் கேள்விகளுக்கும் எப்பொழுதும் போல புன்னகையும் சிரிப்பையும் உதிர்த்து கொண்டே வந்தான் வைரவன்.டேய் எப்போதும் போல சிரிச்சு மழுப்பக் கூடாது .

அங்க உள்ள என்ன நடந்துச்சு அந்த மசாஜ் சென்டர்ல என்ன நடந்துச்சுன்றதை நீ சொல்லத்தான் வேண்டும் முழுவதும் சொன்னால் தான் வண்டி அடுத்து நகரும்.டேய் ஏன்டா வேலைய பாருங்கடா இதெல்லாம் தனிப்பட்ட சுயமான விஷயமடா இதெல்லாம் போய் எல்லாத்தையும் பொதுவெளியில் பகிர்ந்துக்க முடியுமா அவனுடைய தனிமையை புரிஞ்சுக்கோங்க. அவன்ட எந்த கே டீள்வி இதெல்லாம் கேட்கக் கூடாதா என்றான் கௌதம். அது எங்களுக்கும் தெரியும் இருந்தாலும் அவன் எப்படி என்ஜாய் பண்ணுனானாசந்தோசமா இருந்ததா நாம தெரிஞ்சுக்க வேணாமா.

நண்பர்கள் அவர்களாகவே கேள்வி கேட்டு அவர்களாகவே பதில் சொல்லி ஒரே கூத்தும்கும்மாளமும் சிரிப்பும் பேச்சுமிகுந்த போதும் கூட ஒருவார்த்தை பேசாமல் புன்சிரிப்போடு அதனை சமாளித்து தன் கழுத்தில் உள்ள கயிறையும் கையில் கட்டிய கயிறையும் ஒருமுறை பிடித்துக் கொண்டு வண்டியை கவனமாக ஓட்டினான் வைரவன். வண்டி நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது உணவகம் வந்தது.எல்லோரும் அந்த கடல் உணவகத்தின் சிறப்புகளைச் சொல்லி வேட்டையாடினர்.விதவிதமான பெயர்களில் கடல் சார்ந்த உணவுகள் என்னமோ இன்றைய உலகம் அழிந்து விடப் போவது மாறியும் இதற்கு மேல் இந்த உணவு வேறு எங்கும் கிடைக்காத மாதிரியும் அவர்கள் வெறித்தனமாக வேட்டையாடி சாப்பிட்டு முடித்தனர்.

எப்பொழுதும் போல அளவாய் ரசம் சோறு கொஞ்சூண்டு ஊறுகாய் வைரவன் உணவை எடுத்துக் கொள்வதும் உணவை உண்பதும் ஒரு கலை . வரைந்த ஓவியத்தை போல இருக்கும் யார் எவ்வளவு வற்புறுத்தியபோதும் யார் எவ்வளவு அன்போடு கொடுத்த போதும் தன்னுடைய உணவின் அளவையும் அவன் மாற்றிக் கொள்ளவோ முறையை மாற்றிக் கொள்ளவோ இல்லை.அவர்கள் வண்டி மலப்புழா டேமை சுற்றி சென்றது.

மூன்று நாள் பாலக்காடு சுற்றியுள்ள பகுதிகளை எல்லாம் சுற்றி பார்ப்பதாக அவருடைய பயணத்திட்டம்.எல்லோரும் உண்ட மயக்கத்தில் உறங்கிக் கொண்டு வந்தனர் அழகான இயற்கை எழில் சூழ்ந்த கேரளா மலை பாங்கான பகுதியில் வண்டி தாலாட்டுவது போல சென்று கொண்டிருந்தது

கௌதம் கணேஷ் பாண்டி ரவி ரிஷிகேசவன் வைரவன் எல்லோரும் பள்ளியில் ஒன்றாக படிந்தவர்கள்.படித்து முடித்து அவர்களெல்லாம் கல்லூரியிலும் படித்து பெரிய பெரிய வேலையில் சென்னை பெங்களூரு கோயமுத்தூர் திருச்சி என்று பல்வேறு ஊர்களில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டனர் வருடத்திற்கு இரண்டு முறை அல்லது மூன்று முறை ஊருக்கு வந்து நான்கு ஐந்து நாள் தங்கிவிட்டு ஒரு டூர் செல்வது அவர்களின் வழக்கம் எவ்வளவு முறை மறுத்தாலும் வம்படியாக வைரவனையும் அழைத்துச் செல்வார்கள்.

நண்பர்கள் எல்லோரும் அவர்களின் வயதுக்கு ஏத்த வேலைக்கேற்ற வசதிக்கேத்த தோரணையுடனும் உடல்வாகுடனும் இருப்பார்கள் ஆனால் தனிக்கட்டையான வைரவன் வயதை சொல்ல முடியாதபடி ஞானி போல இருப்பான்.

பலமுறை அவர்கள் வற்புறுத்தியும் அந்த ஊரை விட்டு வருவதற்கு வைரவனுக்கு மனசில்லை கடை வச்சு தறோம் சொந்தமாக வீடு கட்டி தர்றோம் எங்க கூட வந்துரு உனக்கு தொழில் ஏற்பாடு பண்றோம் ஹோட்டல் வச்சு தறோம் என எவ்வளவோ சொன்ன பொழுதும் எதையும் அவன் விரும்பாமல் இந்த கட்ட மண்ண கரைச்சு குடிச்சாலும் சொந்த ஊருல தான் இருக்கும் தயவு செய்து என்னை வற்புறுத்தாதீர்கள் என்று சொல்வான்.

கன்னிவாடி பக்கத்தில் உள்ள பூதளம் பட்டி தான் அவன் பிறந்த ஊர் அந்த ஊரில் ஆட்டோ ஸ்டாண்ட் அல்லது டாக்ஸி ஸ்டாணட் அங்கும்இங்கும் மாறி மாறி இருப்பான். தவிரவும் யார் ஆக்டிங் அழைத்தாலும் அவர்களின்வண்டி ஓட்டி வாழ்க்கை நடத்துவான்நண்பர்கள் ஊருக்கு வரும்பொழுது அவர்களுக்கு தேவையான உதவிகள் எல்லாம் செய்து கொடுப்பான் தவிரவும் நண்பர்களின் பெற்றோர்களை பார்த்து கொள்வதும் வைரவன் தான் .

வைரவன் ஒருவன் ஊரில் இருக்கிறான் என்ற மகிழ்ச்சியில் தான் அவர்கள் நிம்மதியோடு தங்கள் ஊரில் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்கௌதம் கணேஷ் பாண்டி ரவி ரிஷிகேசவன் அனைவரின் வீட்டு அத்தனை விசேஷங்களிலும் ஓடி ஓடிவேலைவாய்ப்பது வைரவன் தான் நிச்சயதார்த்தம் திருமணம் காதுகுத்து என்று அவன் இல்லாமல் எந்த ஒரு விசேஷமும் அந்த ஊரில் நடக்காது.வயதான அம்மா அப்பா மற்றும் சின்ன வயதில் கணவனை இழந்து வீட்டுக்கு வந்து விட்ட அக்கா இவர்களையெல்லாம் காபந்து பண்ணுவதனால் அவன் தனிக்கட்டியாகவே இருக்க முடிவு செய்து விட்டான்.

எந்த ஒரு பழக்கத்திற்கும் அவன் ஆட்கொள்ளாமல் தன் சோகத்தை அமைதியால் மௌனத்தால் மட்டுமே கரைத்துக் கொள்வான் எல்லோரிடமும் உண்மையாக மட்டுமே அவன் இதயத்தில் நிறைந்தான். அவனிடம் எல்லோரும் பெற்றுக் கொண்டதுதான் அதிகம் யாரும் அவனுக்கு எதுவும் கொடுத்து விட முடியாது அவன் கோட்டைக்குள் எதுவும் புகுந்து விட முடியாது. அன்பு எவ்வளவு வலியது அதைப்போலவே அன்பு கொடியது அவன் விரும்பாமல் நீங்கள் எதுவும் அவனுக்கு செய்துவிட முடியாது

வண்டி நீண்ட பயணத்துக்கு பிறகு கபில வஸ்து என்ற ஓட்டலுக்கு வந்து நின்றது புக் செய்வது மற்ற பணிகளை எல்லாம் கணேஷ் பாண்டியும் கௌதமும் செய்தார்கள்.வண்டி பார்க்கிங் லக்கேஜ்களை எடுத்து வைப்பது போன்ற வேலைகளை ரிஷிகேசவனும் ரவியும் வைரவனும் பார்த்துக் கொண்டார்கள்.

பெரும்பாலான பயணங்களில் அவன் டிரைவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட தனிப்பகுதிகளில் தங்கிக் கொள்வான் குளிப்பது உடை மாற்றுவது எல்லாம் அங்கேயே முடித்து விடுவான் அவன் ஒரு நண்பனைப் போல் இல்லாமல் ஓட்டுனர் போல் தான் இவர்கள்டூரில் அவன் இதுவரை பங்கெடுத்திருக்கிறான்.

ஆனால் இந்த பயணத்தில் நண்பர்கள் சொல்வதை தான் அவன் கேட்க வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்தி சொல்லிவிட்டார்கள்.எப்போதும் வேட்டி சட்டையோடு இருக்கும் வைரவனை பேண்ட் சட்டில் இருக்கும் வைரவனாகமாற்றினார்கள்அப்போதுதான் அவர்கள் தங்கி இருந்த ஓட்டலில் இரவு நேரத்தில் கேம்பயர் ஏற்ப்பாடானது எல்லோரும் சுற்றி நின்று நடுவில் நெருப்பு மூட்டி இசை ஒலிக்க விட்டு எல்லோரும் பாடி மகிழ்ந்து ஆடி வெட்ட வெளியில் அனைத்து உணவுகளும் பரிமாறப்பட்டு ஓய்வாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கௌதம் தனிமையில் வைரவனை அழைத்து டேய் அங்கே என்னதாண்டா நடந்தது.

அப்போதும் வைரவன் கௌதமைப்பார்த்து புன்சிரிப்பு சிரித்தான்.மற்றும் நண்பர்கள் குடியும் உற்சாகமும் இருந்ததால் தனிமையில் கவுதமும் வைரவனும் தனியாக ஒதுங்கி பேசிக் கொண்டிருந்தனர் மாப்பிள்ளை என்னத்த சொல்ல எனக்கு இதெல்லாம் விருப்பம் இல்ல இருந்தாலும் நீங்க வம்பு பண்றீங்க சொன்னாலும் கேட்க மாட்டீங்க

என் மனசுல நினைச்சது ஒருத்தி அவ வேற ஒருத்தனுக்கு வாக்கப்பட்டு போயிட்டா அவ பார்த்த உடம்ப வேற ஒருத்தி பார்க்கிறதே தப்புன்னுநினைக்கிறேன் நீங்க பாட்டுக்கு தொட்டு தடவி மசாஜ் பண்ண சொல்றது எந்த விதத்தில் நியாயம்.

நீங்க பணம் கட்டின காரணத்துனால அந்த பொண்ணு தொழில் கெட்டுவிடக்கூடாது அவளுடைய வருமானம் பாதிக்கப்பட கூடாதுன்னு அந்த ரூம்குள்ள போனேன். உடுப்பெல்லாம் கழட்ட சொல்லி உடம்புல ஜட்டியை மட்டும் இருக்கிற மாதிரி படுக்க வச்ச பிறகுதான் ரிஷிகேஷ் அந்த ரூம் விட்டு போனேன். கூச்சமா இருக்குடா தயவுசெய்து வெளியே போடா அழுகாத அவனை வெளியே அனுப்பிட்டேன்.

.அதுக்கப்புறம் அந்த பொண்ணு கூல் சார் நோ ப்ராப்ளம் சார் ஐ வில் டேக் கேர் சார் என் ஏதோ ஆங்கிலத்தில் புலம்பினால் கையில எண்ணெய் எடுத்துட்டு வந்து உடம்புல ஊத்த போனா என் தொடையை தொட்டாஒரு நிமிஷம் அப்படியே என்னை மறந்துட்டேன் அப்படியே இருந்ததுன்னா ஆத்தாடி என்னத்துக்கு இத்தனை நாள் கட்டி காத்த மானம் கௌரவம் எல்லாம் ஒன்னும் இல்லாம போயிருக்கும்.

அப்படியே ஜிவ்வுனு ஏறுச்சு பாரு ஒரு நிமிடம் ஆடிப் போயிட்டேன் அதுக்கப்புறம் ஆத்தா மகமாயிஎன்னை காப்பாற்றிணாதங்கச்சி நிறுத்துமா எனக்கு இதெல்லாம் வேணாமா என்று படக் கண்டு எழுந்து விட்டேன்

ஏன் அது ஒன்னும் தப்பு இல்லையே. அது ஒரு மருத்துவம்மாதிர தானே மனசுக்கும் உடம்புக்கும் ஒரு ரிலாக்ஸ்க்கு தானே இதை ஏற்படுத்தி இருக்காங்க.

சரி தப்புன்னு நான் சொல்லல உங்களுக்கு வேணா எப்படியோ என்னால என் மனசுக்கு இதெல்லாம் சரியா வராதுப்பா அங்க உள்ள ஒரு புத்தர் சிலர் இருந்துச்சு அந்த புத்தர் சிரிச்சாரு பாரு என்னை பார்த்து ஆத்தாடி அப்படியே எழுந்து வேட்டிய கட்டிக்கிட்டு ஓரமா ஒக்காந்துட்டேன்.

மாப்ள நீ சொல்றத நம்பற மாதிரியா இருக்கு அப்புறம் எதுக்கு ஒரு மணி நேரம் கழிச்சு குளிச்சிட்டு வெளியே வந்த எவ்வளவு பெரிய சாமியாரும் இந்த விஷயத்துல வீக்கு தம்பி நீ சொல்ற கதையை சின்ன பையன் கூட நம்ப மாட்டேன் ஒரு மணி நேரம் இருந்தா தான் ஒண்ணுமே செய்யலையாம்.நம்புவதும் நம்பாததும் உன்

இஷ்டம் மாப்பிள்ளை அந்த பொண்ணு தான் சொல்லுச்சு ஒரு மணி நேரம் மசாஜ் டைம் சார் இந்த பாதில போனா எனக்கு தர 500 ரூபாய் கட் பண்ணிடுவாங்க

சார் அப்புறம் உங்க இஷ்டம் சார் ஒரு வாரமா சரியா கஸ்டமர் வரல ஏற்கனவே கொரோனா முடிஞ்ச காலத்துல எங்களுக்கு வருமானம் இல்லை என்று அந்த புள்ள சொன்னதுனால ஓரமா ஒக்காந்துட்டேன்.

இல்லைன்னா வெளியில வந்து ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பாங்க அதுக்கெல்லாம் பதில் சொல்றதுக்கு பேசாம உள்ளே இருந்ததெல்லாம் முடிவு பண்ணிட்டேன் அந்த நேரம் முடிந்த உடனே எல்லாரையும் போல நானும் குளிச்சிட்டு நல்லவன் மாதிரி வெளியில் வந்துவிட்டேன்அது சரி நீ நல்லவன்தானடா அப்போ ஒரு மணி நேரமா உள்ள என்னதான் பண்ணின.

அவர் தன்னை மறந்து கூடபிறந்தவன்கிட்ட பேசுற மாதிரி என்கிட்ட தன்னுடைய கதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டா என்னது கதை கேட்டியா பொதுவா இந்த மாதிரி தொழில் இருக்கவுங்க கிட்டகதை கேட்க கூடாதுன்னு சின்ன வயசுல எங்க தாத்தா சொன்னதா நியாபகம்.ஏ மாப்ள நல்ல மைதா மாவுல செஞ்ச கேக்கு மாதிரி உரிச்சு வச்ச உருளைக்கிழங்கு மாதிரி தகதகன்னு இருக்கா 2000 ரூபாய் பணத்த கட்டி 500 ரூபாய் டிப்ஸ் கொடுத்து விட்டாபோய் கதை கேட்டேன் கத்திரிக்காய் ரேட் என்ன கேட்டேன் சொல்றியே.

கிழவனுக்கு கூட மூடு வர்ற மாதிரி அங்க போடப்பட்ட பாட்டு அங்கே வீசற சென்ட் வாசம் அழகான வண்ணமயமான இடம் நல்ல தனிம உடம்பு பூரா எண்ணெய்யை ஊத்தி நல்ல மசாஜ் பண்ணி நல்ல ரோஸ் வாட்டர்ல குளிக்க வைத்து இன்னும் பல சேவை எல்லாம் செஞ்சு அந்த க்காலத்து அரசர் மாதிரி உன்னை அனுப்பலாம்னு பார்த்தா இப்படி ஆண்டிப்பய மாதிரி.

கதை கேட்டு சொல்றியேடா உன்னை எல்லாம் எதை வச்சு அடிக்கிறது? வாழ்க்கையில் எதையுமே பாக்கல எதையுமே அனுபவிக்கல 40 வயசுல இப்படி கழுதை மாதிரி சுத்துறீங்கன்னு உன்னைய இங்க வம்படியா கூட்டிட்டு வந்தா ஒரு பிரயோஜனம் இல்ல போலயே.

அந்த பொண்ணு பேரு திப்தி தமிழ் நல்லாவே பேச தெரிஞ்சு வச்சிருக்கா. மேகாலயா பக்கத்துல ஒரு கிராமம் அம்மா அப்பா இல்ல அந்த ஊர்ல எல்லாருமே இவளை மாதிரி வெள்ளை வெளேர்னு இருப்பாங்களாம் 12 வரைக்கும் படிச்சிருக்கா அதுக்கு மேல படிக்கறதுக்கு வசதி இல்ல பாத்துக்குறதுக்கு ஆளும் இல்லை அந்த பொண்ணோட மாமங்காரன் இந்த மசாஜ் பண்ற வேலையில அந்த ஊர் பக்கத்தில் சேர்த்து விட்டு இருக்கான்ஏஜென்ட் ஒருத்தன் இருக்கான் அவன் பேச்சை நம்பி 5 6 புள்ளைக அங்கிருந்து இங்க வந்து இருக்கு எல்லாப் பிள்ளைகளுக்கும் குடும்ப கஷ்டம் சரியான படிப்பு இல்ல அவங்க மாநிலத்துல பொழப்பு இல்லை மானத்தை வெறுத்து வாழ்க்கை வெறுத்து தான் இந்த தொழிலை அந்த பிள்ளைக பண்ணுதுங்க.

ஒரு ஜான் வயிற்றுக்காகவும் பாதுகாப்பான வாழ்க்கைக்காகவும் உயிர் வாழ்வதற்காக வேண்டி பத்தாயிரம் ரூபாய் அட்வான்ஸ் வீட்ல கொடுத்து இருக்காங்க அதற்கான காரணம் கட்டுவதற்காக ஆறு மாசம் ஏழு மாசம் இங்கே வேலை பார்க்க வேண்டி இருக்கு ஆறு மாசத்துல கடன அடைச்சுட்டு சொந்த ஊருக்கு போலாம்னா அங்கு எந்த வழியும் இல்லை .

சட்டஅவங்க படுற கஷ்டத்துல இன்னும் கொஞ்சம் கடந்த வாங்கி கொடுத்துட்டு இந்த தொழிலை தொடர்ந்து செஞ்சுட்டு இருக்காங்கஆரம்பத்துல நர்ஸ் மாதிரி தான் இது ஒரு சேவை தான் மருத்துவம் தான்

அப்படின்னு சொல்லி இந்த பிள்ளைகளுக்கு மூலச் சலவைவு செஞ்சிருக்காங்க முத முதல்ல ஒருத்தன் உடம்பை தொடும் போது ஏற்படுகிற கூச்சம் அவமானம் அவன் பண்ற அலும்பு சேட்டை இவங்கள மெல்ல மெல்ல மரத்துப் போக வச்சிருச்சு.

தொந்தி வச்சவன் தோல் வியாதி வந்தவன் பல்லு போனவன் பாயில் போனவன் தடிமாடு என எத்தனையோ ஆண்களை தொட்டு தடவி அவன் பண்ற சேட்டை எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு அவன் கூட பிற காசை வாங்கிவிட்டு இந்த பிள்ளையை வாழ்கிற வாழ்க்கை இருக்கே அப்பப்பா கேட்கிற நமக்கு என்னமோ போல இருக்கே எப்படி ஒவ்வொரு நாளையும் 10 பேரை 20 பேரை இவர் சமாளிக்கிறது.நோய் எதிர்ப்பு சக்திக்காக ஊசி போட்டுக் கொள்வதும் மாத்திரை சாப்பிடுவதும் கைகளில் கிளவுஸ் மாட்டிக் கொள்வதும் அப்பப்பா.

எங்க அப்பா உயிருடன் இருந்தா எங்க அம்மா உயிரோட இருந்தா என்னை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பி இருப்பாங்க அண்ணா எங்க ஊரு எவ்வளவு இயற்கை வளம் சார்ந்தது தெரியுமா அண்ணா. இங்கே ஒரு பூவ கூட என்னால் ரசிக்க முடியல வாழ்க்கையே வெறுப்பா இருக்கு.

நல்ல பாட்டு பாடுவேன் டான்ஸ் ஆடுவேன் கதை சொல்லுவேன் கதை கேட்பேன் என் சிறகுகள் எல்லாம் முடிஞ்சு போன மாதிரி இருக்குண்ணா.ஆரம்பத்துல வெறும் பாடி மசாஜ் பண்ணும் போது கூட ஒன்னும் சிரமம் தெரியல பின்னாடி குடிச்சிட்டு வந்துட்டு அவங்க பண்ற தொந்தரவு மர்ம உறுப்புகள் தொடச்சொல்லி அங்கே மசாஜ் பண்ண சொல்லி அவங்க பண்ற துன்பம் இன்னும் சொல்ல முடியாத பல துயரங்களுக்கு நாங்க ஆளானோ இத பத்தி எங்க ஏஜென்ட் பேசுனா காசு வருது இல்ல நாளைக்கு ஆள் குறைந்துவிடும் கடந்த கட்ட முடியாது என்று எங்களை பயமுறுத்துகிறான்ஆண்கள் மேல உள்ள ஆசையே போயிருச்சு. ஆனா உங்கள

பார்த்த உடனே ஏதோ உடன் பிறந்தவனை போல எனக்கு தோன்றியது. அது ஏதோ சொல்ல முடியாத ஒரு சொந்தம் கூட நீங்க இருக்கீங்க அதான் என்னுடைய வேதனையை போலாம் உன்கிட்ட கொட்டனும்னு தோணுச்சு கொட்டிட்டேன் தயவு செய்து வெளில சொல்லிடாதீங்க.நீ யாரையாவது காதலிக்கிறாயா காதலிச்சு இருக்கியா எப்படி இந்த கேள்வியை நீங்க கேட்டீங்க நீ காதலில் விழவில்லை என்று சொன்னால் இந்நேரம் தற்கொலை பண்ணி செத்திருப்பாய் இதை சொன்னவுடன் அவள் முகம் பிரகாசமானது தெரு விளக்கு போட்டது போல எத்தனை ஜூவாலை அவர் கண்களில் தெரிந்தது.ஆமாம் அவன் மேட்டூரில் பேப்பர் மில்லில் வேலை செய்கிறான் ரமேஸ்.

ஒரு நாள் இங்கே மசாஜ் செய்ய நண்பரோடு வந்தவன் தான் உனக்கு முதல் முறை என்பதனால் மிகவும் பரிவோடு பேசினார் கொஞ்ச நாளில் பணம் சம்பாதித்துக் கொண்டு என் கடன் எல்லாம் அடைத்து விட்டு என்னை திருமணம் செய்து கொண்ட ஊருக்கு அழைத்துத்செல்வதாக சொன்னான் ரொம்ப நல்லவன் அன்பானவன் என் தேவைகளை உணர்ந்தவன் என் நியாயங்களை புரிந்து கொள் எனக்காக பரிவாக பல செயல்களை செய்தவன் நாங்கள் உடலால் இணைவதை விட மனதால் இணைவதையே இருவரும் விரும்பினோம் அவனும் என்னைப் போல பல இன்னல்களை துயரங்களை தாண்டி வந்தவன் எனக்காக இங்கே இந்த மசாஜ் சென்டர் பக்கத்திலேயே சில நாட்கள் தங்கி இருந்தார் என்னிடம் மசாஜ் செய்வதற்காகவே அவன் இறைவனெல்லாம் வண்டி ஓட்டி வேலை செய்தேன் பணத்தை சேர்த்து இங்க வந்து கொடுத்து.

என்னை பார்த்து பேசி விட்டு மட்டும் செல்வான். வாங்கி கொடுத்த மோதிரம் இன்னும் என் கைகளில் இருக்கிறது நான் அவனுக்கு கொடுத்த முத்தங்களை அவன் சேமித்து வைத்திருப்பான் நான் ஒரு சட்டை வாங்கி கொடுத்தேன் அந்த

சட்டையை தான் எப்பொழுதும் அறிந்து கொள்வதாக எனக்கு சொன்ன வாரம் ஒரு முறை தொலைபேசியில் பேசுவான் ஊருக்கு சென்று விட்டான் இப்பொழுது பேசுவதே இல்லை.

அவ்வப்போது தொலைபேசியில் பேசுவான் ஆனால் கொஞ்ச நாட்களாக அவன் போனை எடுக்கவில்லை யார் யாரோ அந்த எண்ணை எடுக்கிறார்கள் சரியாக பேசுவதில்லை புகைப்படத்தையும் தொலைபேசி எண்ணையும் குறித்துக் கொண்டான்.அவன் வருவான் என்று உயிரை கயல் பிடித்துக் கொண்டு ஆவலோடு காத்திருக்கிறேன் இல்லை என்றால் என் சொந்த ஊருக்கு செல்லும் நாள் எப்போது என்று ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.

நீங்க எல்லாம் எங்க தங்கி இருக்கீங்க என்று கேட்டேன்.இங்க பக்கத்தில் வீடு பார்த்து வைத்திருக்கிறார்கள் அங்கே நாங்களே சமைத்து சாப்பிடுகிறோம் அவ்வப்போது பொருள் வாங்கி தருவார்கள் நீ போய் அந்த ஊர்ல அவனை தேடி பார்க்க வேண்டியதுதானே என்றேன்.

அய்யய்யோ கொன்னே போற்றுவாங்க ஸ்பா சென்டர் மற்றும் நாங்கள் தங்கி இருக்கிறோம் வீடு இது தவிர வேறு எங்கே நாங்கள் செல்ல அனுமதி இல்லை வீட்டில் டிவி இருக்கிறது . வீட்டிலேயே சமைக்க சாப்பிட இந்த வேலைக்கு வர தூங்க இதுவே சரியா இருக்கிறது. அஸ்ஸலாமு அலைக்கும் சந்திக்கவும் பேசவும் எங்களுக்கு அனுமதி இல்லைநீங்கள் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா எப்படியாவது இந்த முகவரிக்கு மேட்டூருக்கு சென்று ரமேஷ் இருக்கிறானா என்று பார்த்து அவளுக்காக ஒருத்தி உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருப்பாள் என்பது மட்டும் சொன்னால் மகிழ்வேன் அண்ணா.

இவளுக்கு எப்படி சொல்வது என்று புரியவில்லை மேட்டூர் எவ்வளவு பெரிய ஊர் அங்கே ரமேஷ் எத்தனை பேர் இருப்பான். தேடி கண்டுபிடித்து அவனை அழைத்து வருவதெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை இருந்தாலும் அவள் மனதுக்காக சரி என்று சொன்னேன்.

என்னை பாசத்தோடு கட்டிப்பிடித்துக் கொண்டாள் கண்ணீர் துளிகள் என் மார்பில் இப்படி என்னிடம் கண்ணீர் கதைகளை சொன்ன எத்தனையோ பெண்களில் தீப்தியும் ஒருவராய் சேர்ந்து விட்டாள்..

வைத்திருந்த 1000 ரூபாய் அவரிடம் கொடுத்துவிட்டு உன்னை மறக்க மாட்டேன் மற்றொரு முறை உன்னை பார்ப்பதற்காக இங்கே வருவேன் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கனத்த இதயத்தோடு குளித்துவிட்டு வெளியே வந்தேன்.

இதை நமது நண்பரிடம் சொன்னால் என்னை மேலும் பரிகாசம் செய்வார்கள் அவர்களைப் பொறுத்தவரை நான் மசாஜ் ஸ்பாவில் செய்ததாகவே இருக்கட்டும்.கௌதம் நீ யாரிடமும் உளறிடவே கூடாது.கௌதம் கலங்கி போய்விட்டார் அப்பப்பா நான் என்னமோ மசாஜ் போயிட்டு வந்தா எவனோ சொன்னத கேட்டுட்டு போயிட்டு வந்தேன்.

ஆனா நீ சொன்னதை பார்த்தா அவங்களுடைய வாழ்க்கையிலும் எவ்வளவு சிரமங்கள் இருக்கிறது என்று தெரிந்துவிட்டேன் இப்ப என்னடா செய்யப் போற மேட்டூருக்கு போவோமா டா நானும் வரேன் என்றான் .

கௌதம்.எல்லோரும் அந்த டூரை முடித்துவிட்டு மிகவும் ஜாலியாக அவனை ஓட்டிக்கொண்டு ஊருக்கு வந்து சேந்தார்கள்இரண்டு நாட்களாக உறக்கம் வராதவனாய் வந்த வேலை எல்லாம் விட்டுவிட்டு படுத்து உறங்கி கொண்டு இருந்தான் வைரவன் நம்மள நம்பி ஒரு புள்ள தன் கதை எல்லாம் சொல்லி ஏதாவது செய்யணும்னு கேட்டு இருக்கு மேட்டூர்பக்கம் போய் ரமேஷ் இருக்கிறானா பாத்துட்டு வருவோம் எனபுறப்பட்டான் வைரவன்.ஒரு வழியாக மேட்டூர். வந்து இறங்கி அந்த தொலைபேசி எண்ணை வைத்துக்கொண்டு ரமேசை வீட்டை கண்டுபிடித்தார்கள் கௌதமும்

வைரவன்.அவன் வீட்டில் ரமேஷ் இல்லை உன் போட்டோ மட்டும் அங்கே தொங்கிகொண்டு இருந்தது.ஒரு சாலை விபத்தில் அவன் மரணம் அடைந்த செய்தியும் அவன் அண்ணன் தான் அவன் என்னை

வைத்திருக்கிறான் என்று செய்தியும் அங்கே போனவுடன் கிடைத்தது. இதை மறுபடியும் அவளிடம் பொய் சொல்லலாமா சொன்னால் அவர் தாங்குவாளா மேலும் வேதனை அதிகப்படுத்துமே அவன் வருவான் என்ற ஆசையோடு இருக்கும் அவளை ஏமாற்றுவதா? அப்படியே விட்டு விடலாம் என்று இருவரும் முடிவு செய்தார்கள்.

ஆறு மாதத்திற்கு பிறகு மீண்டும் நண்பர்கள் டூர் செல்வதற்கான ஏற்பாடு ரெடியா இருந்தது ஸ்பாவிற்கு செல்ல வேண்டும் என்று வைரவன் தான் முதலில் சொன்னான்.

நண்பர்கள் கேலியாக சிரித்தார்கள் பாத்தியா ருசி கண்ட பூனை பாலத்தெடுது.இவர்கள் சென்ற ஃஸ்பாவில் தீப்தி.

எப்படி சொல்வது எங்கே இருந்து தொடங்குவது என்று பல கேள்விகளோடு வைரவன் இருந்தான் ஏதும் அறியாதவளாய் புதிதாக ஒரு வாடிக்கையாளனை பார்ப்பவரை போல. மசாஜின் வகைகளை விளக்கிக் கொண்டிருந்தாள் தீப்தி.அந்த கண்ணாடிக்குள் ஜூவாலை மட்டும் அப்படியே தெரிந்தது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *