கொழும்பு பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் – மன்னிப்பு கோரிய காவல்துறை

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொழும்பு பல்கலைக்கழகம் அருகே மாணவர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் காவல்துறையினர் விரட்டினர்.

மேலும் போலீசார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போலீசாரின் தாக்குதலுக்கு மாணவர் அமைப்பு மற்றும் பேராசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேராசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியது. இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் கண்ணீர் புகை குண்டு வீசியதற்கு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் காவல்துறை மன்னிப்பு கோரியுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button