உலக மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

ஆண்டுதோறும் மார்ச், 8ல் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி:

இந்தியா வளர்ச்சியில் பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்களின் அதிகாரத்திற்காக அரசு தொடர்ந்து பணியாற்றும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்:

பெண் அடிமைத்தனம் அகற்றுவோம், பெண்ணுரிமை காப்போம், அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சி காண்போம் எனக் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அண்ணாமலை

‛‛ எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்” என்ற பாரதியின் கனவுக்கேற்ப, சமூகம், பொருளாதாரம், கலை, கலாச்சாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் நம் சகோதரிகளால் நம் நாடே பெருமை கொள்கிறது.

சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றும் வலிமை மிக்க மகளிருக்கு, தமிழக பா.ஜ., சார்பாக சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சீமான்:

எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்கு சரிநிகராக பெண்களுக்கும் 50% இட ஒதுக்கீடு, அலுவலகங்களுக்கு பெண்கள் 15 நிமிடம் தாமதமாக வந்தாலும் பணியில் இணைக்க நேர நீட்டிப்பு, பெண்கள் பாதுகாப்பு என தனிப்படை ஆகியவை ஆட்சிக்கு வந்தப்பின் பெண்களுக்கு பெற்றுக் கொடுப்போம்.

உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் எனக் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button