ஆளுக்கொரு டாக்டர் பட்டம்…! நடிகர் வடிவேலு- இசையமைப்பாளர் தேவாவுக்கு போலி பட்டம்!
https://www.youtube.com/watch?v=-GzwnjZl4Ks&t=106s
ஆனால் அந்த விருது விழா அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தாலும் IACHRC அமைப்பினால் வழங்கப்பட்ட விருது என பின்னர் தெரிய வந்துள்ளது. இதனால் அரசியல் மற்றும் அரசு சாரா ஒரு தனியார் அமைப்பு கல்வி நிறுவனம் ஒன்றில் வைத்து பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் விருது வழங்குவதற்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ள புகார் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
அவர் தெரிவித்துள்ள புகாரில் “அண்ணா பல்கலைக்கழகம் பெயரில் இசையமைப்பாளர் தேவா, வடிவேலு உள்ளிட்டோருக்கு போலி டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தையும் அந்த அமைப்பு ஏமாற்றியுள்ளது” என்று கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக ஒப்புதல் இன்றியே அதன் பெயரில் தொண்டு நிறுவனம் விருது வழங்கி ஏமாற்றிய சம்பவம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
![]()