சிறை எப்படி இருக்கும்? வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் இந்தியச் சிறைச்சாலை
சிறை எப்படி இருக்கும் என்று எப்போதாவது எண்ணியதுண்டா?
அத்தகையோருக்கு இந்தியாவின் உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலம் ஒரு வித்தியாசமான திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
ஹல்துவானி (Haldwani) நகரின் சிறைச்சாலை நிர்வாகம் சுற்றுப்பயணிகளை ஈர்க்கப் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
ஹல்துவானி சிறைச்சாலை 1903-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
புதுப்பிக்கப்பட்டுள்ள அந்தச் சிறைச்சாலையில் 500 ரூபாய் செலுத்தி ஓர் இரவு தங்கியிருக்கலாம்.
‘கைதிகளுக்கு’ச் சீருடையும் சிறைச்சாலை உணவும் வழங்கப்படும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
எதிர்காலத்தில் சிறையில் அடைக்கப்படக்கூடிய சாத்தியத்தைத் தவிர்க்க ஒரு சிலரைச் சிறையில் சிறிதுகாலம் தங்கும்படி அவர்களின் ஜோதிடர்கள் ஆலோசனை கூறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அவர்களும் அந்தச் சிறையில் நேரத்தைக் கழிக்கின்றனர்.
விருப்பமுள்ளவர்கள், ஓரிரவுக்கு மட்டும் சிறை அனுபவத்தைப் பெறலாம்… இந்தியாவின் இந்த விசித்திரச் சிறைச்சாலையில்…
![]()