தமிழக நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு
மதுரை விமான நிலையம் அருகே, தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு, அவரது உடலுக்கு தியாகராஜன், கலெக்டர் அனீஷ் சேகர், மேயர் இந்திராணி, அதிகாரிகள், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், விமான நிலையத்தில் இருந்து கிளம்பி செல்லும் போது தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையத்திற்கு தியாகராஜன் வந்தார். பாஜ.,வினரும் அங்கு வந்திருந்தனர். அப்போது அரசு நிகழ்ச்சிக்கு கட்சியினர் குவிந்தது ஏன் என தியாகராஜன் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அவருக்கும் பா.ஜ.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அஞ்சலி செலுத்திவிட்டு தியாகராஜன் கிளம்பிய போது, அவர் கார் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செருப்பு வீசியது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![]()