“ரொக்கட்ரி” திரைப்படம்!…. ஏலையா க.முருகதாசன்.

நடிகர் மாதவன் நடித்த ரொக்கட்ரி என்ற படம் பார்த்தேன்.இது ரொக்கட் சம்பந்தப்பட்ட விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட கதை.
இந்திய விஞ்ஞானக் கழகமான இஸ்ரோவின் விண்வெளி பொறியியலாளராக இருந்த நம்பி நாராயண் இஸ்ரோவிக்கும் இந்தியாவிற்கும் ஆற்றிய பணியையும் நம்பி நாராயணன் பாகிஸ்தானுக்கு மாலைதீவுக்கு ஊடக இஸ்ரோவின் விண்வெளி சம்பந்தப்பட்ட இரகசியங்களை விற்றார் என அவரைக் கைது செய்து சித்திரவதைக்குட்படுத்தி பின்னர் அவர் நிரபராதி என விடுவிக்கப்பட்ட படம் தான் ரொக்கட்ரி.![]()
ரொக்கட்டினை உந்தித்தள்ளும் விசைக்காக எரியக்கூடிய திரவத்தை பயன்படுத்தலாம் என்ற உண்மையை கண்டுபிடித்தமைக்காக நம்பியின் விளைவு என்று பெயரிடப்படுகின்றது.
இதில் நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் சிறப்பாக நடித்திருக்கிறார்.சிறப்பாக நடித்திருக்கிறார் என்பது கதைக் கதாபாத்திரத்தின் தன்மை எதுவோ அதை அளந்தறிந்து நடித்திருக்கிறார் என்பதேயாகும்.
இந்தப் படத்தை விஞ்ஞானி நம்பி நாராயணனின் ஒப்புதலோடு நடிகர் மாதவனே தயாரித்தும் இருக்கிறார்.
கதை நகர்வில் நம்பி நாராயணன் தான் கண்டுபிடித்த உந்துசக்தி விளைவிற்காக பிரான்ஸ் விஞ்ஞானக் கழகத்துடனும், ரஸ்யா விஞ்ஞானக் கழகத்துடனும் சேர்ந்தியியங்கியமையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இரு நாட்டு விஞ்ஞானக் கழகத்தினரும் ஒருபக்கம் உதவியைச் செய்து கொண்டு இன்னொரு பக்கம் நம்பி நாராயணன் மீது மட்டுமல்ல, இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னேறிச் செல்வதை விரும்பவில்லை என்பதை காட்சிப்படுத்தப்படாத காட்சியாகவும் இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.
இந்திய விஞ்ஞானி அப்துல்கலாமை இது தங்களுடைய கடமை என அமெரிக்கா சென்ற அவரை விhனநிலைய அதிகாரிகள் அவரைத் தெரிந்திருந்தும் அவமானப்படுத்தியமையை மறக்க முடியாது.
அவரின் இறப்பில் சந்தேகம் உண்டு;.வயதான ஒருவருக்கு நெடுந்தூரப் பயணத்துடன் ஓய்வெடுக்க நேரம் கொடுக்காமல் தொடர் நிகழ்ச்சிகளில் அவரைப் பங்குபற்றச் செய்தமை மூலம் அவரை இறக்கச் செய்தார்கள் என்பது வலுவான சந்தேகமே.அவர் அருந்திய பானங்களிலோ, சாப்பிட்ட உணவு வகைகளிலோ அவரின் உடலியக்கத்தை வலுவிழக்கச் செய்யும் வேதியல் பொருள் கலந்திருக்கலாம் என்று சந்தேகப்பட வாய்ப்புண்டு.
நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டதற்கு பின்னால் இன்று விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அத்தனை நாடுகளின் சூழ்ச்சி இருக்கின்றது என்பதும்கூட சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கின்றது.
இந்திய விஞ்ஞானிகளை கைது செய்ய வைப்பதன் மூலமும் அவர்களை அழிப்பதன் மூலமும் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேறிவிடக்கூடாதென்பதில் இத்தகு நாடுகள் திட்டமிட்டு வேலை செய்கின்றன.
ஆனால் மற்றைய நாடுகளைவிட இந்தியாவின் சித்தர்களும் யோகிகளும் மெய்ஞானிகளும் பிரபஞ்சத்தையும் கோள்களையும் தமது ஞானத்தால் அளந்தறிந்தவர்கள் என்பதும், இந்தியாவிலிருந்து திருடிச் சென்ற ஏட்டுச்சுவடிகளின் வழிதான் விண்வெளி ஆராய்ச்சியை நாசா செயல்படுத்துகின்றது என்பதை மறுக்க இயலாது.
இத்தகு நாடுகள் இரகசியங்களை அறிந்து கொள்வதற்காக பெண் பொருள் பணத்தை அறிவுஜீவிகளுக்கு வழங்கவார்கள் என்பதும் அதுவும் உளவு நிறுவனங்களின் தந்திரமென்பதும் உண்மையே.
அதற்கமைய நம்பி நாராயணன் தனது நாட்டுக்கு துரோகம் செய்யாத போதும் அவரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் „மரியாவுடன் படுத்திட்டாடா இரகசியங்களை கொடுத்தாய்’ எனக் கேட்கிறார்கள்.
உளவு நிறுவனங்கள் இரகசியங்களை அறிவதற்கு அறிவுஜீவிகளின் பலவீனங்களைப் பொறுத்து பெண்,பொருள், பணத்தை பயன்படுத்துகனிறார்கள் என்பது உண்மைதான்.
இது வழமையான மசாலாப் படமல்ல.காத்திரமான அனைவரும் பார்க்க வேண்டிய படமே
![]()