பாதிரியாா் ஸ்டேன் ஸ்வாமி மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம்

பாதிரியாா் ஸ்டேன் சுவாமியின் மரணம் குறித்து இந்தியாவில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்கர் பரிஷத் வழக்கில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பாதிரியாா் ஸ்டேன் சுவாமி, 2020 அக்டோபரில் கைது செய்யப்பட்டார். பின் தனது 84 வயதில், அவர் ஜூலை 5, 2021 அன்று மும்பையின் புனித குடும்ப மருத்துவமனையில் காலமானார்.எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் இவரும் ஒருவர் ஆவார்.
மனித உரிமை ஆா்வலா் பாதிரியாா் ஸ்டேன் ஸ்வாமி மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீா்மானம் அறிமுகம்பாதிரியாா் ஸ்டேன் சுவாமியின் மரணத்தைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் அலுவலகம், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்புப் பிரதிநிதி மற்றும் மனித உரிமைகள் கொள்கை மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான ஜெர்மன் ஆணையர் ஆகியோரும் கவலை தெரிவித்திருந்தனர்.
ஆனால், பாதிரியாா் ஸ்டேன் சுவாமி சட்டத்தின்படியே நடத்தப்பட்டதாக கூறி சர்வதேச விமர்சனங்களை இந்தியா நிராகரித்தது குறிபிடத்தக்கது. இந்நிலையில், ‘இந்தியாவில் மத சிறுபான்மையினர் மற்றும் அவர்களது பாதுகாவலர்களைத் துன்புறுத்துதல்: காவலில் இருந்த தந்தை ஸ்டானின் மரணத்தை நினைவு கூர்தல்’ என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பிநர் ஜுவான் வர்காஸ் கூறியதாவது, “பாதிரியாா் ஸ்டேன் சுவாமியின் சேவைகளை கவுரவிக்கும் வகையில், அவர் மறைந்த ஓர் ஆண்டுக்கு பின் இந்த தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது” என்றார். மனித உரிமைகளுக்காக வாதிடும் தனிநபர்களை தவறாக நடத்துவதும் சிறையில் அடைப்பதும் நீடிக்க முடியாது என்பதை இந்திய அரசுக்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்து அரசாங்கங்களுக்கும் இந்த தீர்மானம் தெளிவுபடுத்தும். மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை குறிவைக்க பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்தும் இந்த தீர்மானம் கவலை தெரிவிக்கிறது.தேசத் துரோகச் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பையும் இந்தத் தீர்மானம் பாராட்டுகிறது.
![]()