சங்கமம்

இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின்போது இந்திய ரசிகர்கள் மீது இனவெறி தாக்குதல்

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவிந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவ் சதம் அடித்து அசத்தினார். இதை தொடர்ந்து இந்திய அணி 2-வது இன்னிங்ஸ்சை தொடங்கியது. புஜாரா 66 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷ்ரேயஸ் ஐயர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த பண்ட் 2-வது இன்னிங்சிலும் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதன் மூலம் இந்த போட்டியில் வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்துள்ளது.இன்று 5வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் 4-வது நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இந்திய ரசிகர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்துள்ளது. இங்கிலாந்து ரசிகர்கள் இனவெறியுடன் திட்டியதாக சில இந்திய ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த இனவெறி குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.