5 வயது பெண் குழந்தை கைகால்களை கட்டி வீட்டின் மேற்கூரையில் வீசி சித்ரவதை!

டில்லியில் 5 வயது பெண் குழந்தையின் கைகால்களை கயிற்றில் கட்டி வீட்டின் மேற்கூரையில் கொளுத்தும் வெயிலில் காய வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

தலைநகர் டில்லியின் வடகிழக்கு பகுதியான காராவால் நகரின், துக்மிர்பூர் என்ற பகுதியில் ஒரு வீட்டின் மேற்கூரையில் 5 வயது பெண் குழந்தையின் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கொளுத்தும் வெயிலில் படுத்திருக்கும் வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர்.

விசாரணையில், சித்ரவதைக்குள்ளான குழந்தை 1-ம் வகுப்பு மாணவி என்பதும், வீட்டு பாடம் எழுதாததால், இப்படி ஒரு கொடூர தண்டனையை கொடுத்துள்ளது தெரியவந்தது. இது குறித்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Loading

Back to top button