உடலில் கத்தியால் வெட்டி பக்தர்கள் ஊர்வலம்

மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ளது எ.கோட்டைப்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள ராமலிங்க சவுண்டம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்த ஆண்டும் வைகாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. 2-ம் நாள் திருவிழாவான நேற்று உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் இருந்து சவுண்டம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த ஊர்வலத்தின் போது வழி நெடுகிலும் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கத்தியால் தங்கள் உடலை வெட்டி ஆடியபடி வந்தனர்.

இவ்வாறு வரும்போது, தீயசக்திகள் விலகி கரகம் எந்த இடையூறும் இன்றி கோவிலை வந்தடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *