மனைவியா் தினம் கொண்டாட வேண்டும்- இணை மந்திரி கோரிக்கை

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ராம்தாஸ் அத்வாலே இந்திய குடியரசுக் கட்சியின் (ஏ) தலைவா் ஆவாா். 10 ஆண்டுகளுக்கு மேல் பாஜக தலைமையிலான கூட்டணியில் உள்ள இவர் தற்போது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரியாக உள்ளார்.

நேற்று மகாராஷ்டிர மாநிலம் சாங்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் கூறியதாவது:-

தாய் நம்மைப் பெற்று நமக்கு வாழ்க்கையை உருவாக்கி தந்தார். அந்த வாழ்க்கைக்கு துணையாக மனைவி முக்கியமான காலகட்டத்தில் வருகிறார்.

நமது நல்லது, கெட்டது என அனைத்திலும் மனைவி உடன் இருக்கிறாா். ஒவ்வோா் ஆண்மகனின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாா் என கூறுவார்கள். இங்கு பெரும்பாலானவா்களுக்கு அந்த நபா் மனைவியாகத்தான் இருப்பார். எனவே மனைவியா் தினமும் கொண்டாடப்பட வேண்டும்.

இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மனைவிக்கு நன்றி பாராட்டும் தினம் ஏற்கெனவே கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *