கவிதைகள்

வம்புக்கிழுக்கும் உன் வைர மூக்குத்தி!… ( கவிதை ) ….. ஶ்ரீவள்ளியம்மை ஶ்ரீவள்ளி.

என்னைப் பார்க்கும்போ
தெல்லாம் கண்ணடித்தபடி
என்னை எப்போதும்
வம்புக்கிழுக்கும் உன்…
வைர மூக்குத்தி…
அது அப்படியெல்லாம்
ஒன்றும் அழகாய் தோன்ற
வில்லையடி எனக்கு…
வைரக்கட்டி உன்மீது
சற்றேஒட்டி உறவாடிக்
கொண்டுடிருக்கிறது
அவ்வளவுதான்.
உனக்காகத்தான்
மூக்குத்தியேதவிர அதற்காக
ஒன்றும் நீ எனக்குள் வாழ்ந்திருக்கவில்லையடி….
அது உன்னுடைய
மூக்குத்தியாக
இருப்பதாலோ
என்னவோ…
எப்போது பார்த்தாலும்
அது என்னையேதான்
சுற்றிச்சுற்றி வருகிறது…
உன்னைப்போல…

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *