சிறப்பு செய்திகள்

சீனாவின் மனித உரிமை மீறல்களை எதிர்த்து கேள்வி எழுப்பும் ஜப்பான்

பெய்ச்சிங் ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்க இன்னும் சில நாள்களே இருக்கும் வேளையில் சீனாவின் மனித உரிமை மீறல்களை எதிர்த்து ஜப்பான் கேள்வி எழுப்பியுள்ளது.

பல மாதங்களாய் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து ஜப்பானிய நாடாளுமன்றம் சின்ஜியாங் (Xinjiang), ஹாங்காங் (Hong Kong) முதலியவற்றில் நிகழும் மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

ஆனால் அது நேரடியாகச் சீனாவைக் குறைசொல்லவில்லை.

இந்நிலையில் ஜப்பானிய அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அனைத்துலச் சமுகத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றுமாறும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் சீனா சின்ஜியாங்கில் தான் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்று கூறிவருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *