சிறப்பு செய்திகள்

நியூஸிலந்துப் பிரதமருக்கு COVID-19 பரிசோதனை: நோய்த்தொற்று இல்லை

நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டனுக்கு (Jacinda Ardern) மேற்கொள்ளப்பட்ட COVID-19 பரிசோதனையில் அவருக்குக் கிருமித்தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் நாளை (1 பிப்ரவரி) முதல் அவர் சுயமாகத் தனிமைப்படுத்திக்கொள்வார் என்று அரசாங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஆக்லந்து சென்று வந்த விமானத்தில் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதால் நேற்று (30 ஜனவரி) நோய்த்தொற்றுப் பரிசோதனை மேற்கொண்டார் திருவாட்டி ஆர்டன்.

விமானப் பயணத்தின்போது உடனிருந்த ஆளுநர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *