சிறப்பு செய்திகள்

COVID-19 தொற்றியிருக்கலாம் என்பதால் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்டார் நியூஸிலந்துப் பிரதமர்

நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனார்.

சென்ற வாரம், ஆக்லந்து சென்று வந்த விமானத்தில் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதால் நாளை மறுநாள் வரை அவர், சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்வார்.

திருவாட்டி ஆர்டனுக்கு இன்று நோய்த்தொற்றுப் பரிசோதனை நடத்தப்படும். நலமாக இருக்கும் அவருக்கு இதுவரை அறிகுறி ஏதும் தெரியவில்லை.

விமானப் பயணத்தின்போது உடனிருந்த ஆளுநர் உள்ளிட்ட ஏனைய அதிகாரிகளும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *