கதைகள்

எல்லாம் அவன் செயல்!… ( சிறுகதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

எவையெல்லாம் அவன் செயல். எல்லாம் அவன் செயல் என்பதற்கு பொருள்தேடி ஓடினான். ஒருபுறம் எல்லா வசதிகளும் பெற்று இன்பமாக ஒருவன் வாழும்போது இன்னொருவன் எந்தவசதியும் இல்லாமல் இழிநிலையில் இருக்கிறான். இது எதனால் என்றால் எல்லாம் அவன் செயல் என்கிறார்கள். மனது ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இதை வெளியே வெளிப்படையாக சொன்னால் நாத்திகவாதி என்று நம்மை வேறுமாதிரியாக பார்க்கிறார்கள் என்று புலம்பலானான் கௌசிகன் தன் நண்பன் உதயனிடம்.

அதற்கு உதயனோ உனக்கு இதுவே வேலையா போச்சு. எவன் எப்படி போனா நமக்கென்ன நாம் வசதியாய் இருக்கிறோமா அதை நினைத்தை மகிழ்ச்சியாய் இரு என்றான்.

அதற்காக கருவறையில் வைத்து கற்பழிப்பதையும் பேருந்தில் பயணம் பெண்ணை பாலியல் பலாம்காரம் செய்வதையும் சமாதானம் என்று வருபவர்களை சாகடிப்பதையும் சகித்துக் கொண்டுதான் இருந்தாக வேண்டுமா என்றான் கௌசிகன்.

“எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்”
என்றான் உதயன்.

“என்னது? எல்லாம் அவன் பார்த்துக் கொள்வானா? அது மனிதர்கள் மனிதர்காக வாழ்ந்த காலத்தில்”

“என்ன சொல்கிறாய்? இப்போது மனிதர்கள் எல்லோரும் மாக்களாகவா இருக்கிறார்கள்?”

“நான் அப்படிச் சொல்ல வரவில்லை. மாக்களாகவும் இருக்கிறார்கள்” என்று அவன் வாயை அடத்தான் கௌசிகன்.

உன்னை திருத்தமுடியாதப்பா. ஊரில் இல்லாத அயோக்கியத்தனமெல்லாம் பட்ணிவிட்டு உத்தமனாக எல்லோரும் போற்றும்படி வாழ்நத்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் நல்லதை நினைத்தே எல்லோரிடமும் கெட்டபெயர் எடுக்கிறாயே? அப்படி என்ன கடவுள் மீது உனக்கு கோபம் என்று உதயன் கேட்க கடவுள் மீது எனக்கென்ன கோபம்  இந்த மக்கள் மீதுதான் கோபம் என்று சொன்னவனிடம்,

“கேள்விப்பட்டதை எல்லாம் மறப்போம் உனக்கு தெரிந்தவர்கள் யாராவது பாதிக்கப் பட்டிருக்கிறார்களா”

“என் ஊரில் நடந்த கதையையே சொல்கிறேன் கேள்” என்று கௌசிகன் சொல்ல,

இருவரும் கொஞ்சதூரம் நடந்துசென்று
பக்கத்திலுள்ள பூங்காவில் உள்ள இருக்கையில் அமர்ந்தனர். பெங்களூர்
கப்பன் பாக் மரங்கள் அடர்ந்த இடம். ஆனால் குளர்காலமாக இருப்பதால் சடாலென வரும் பனிப்புகையில் எதிரே
வரும் ஆட்கள் பனிமூட்டத்தில் திருவிளையாடல் படத்தில் வரும் கைலாயத்தில் தெரிவதுபோல் தெரிவார்கள்.

கௌசிகன் தொடரந்தான். வேறு யாரையும் பற்றி நான் சொல்லவில்லை. எனது உறவினர்கள் இருவரைப்பற்றி சொல்கிறேன் நீ உலகினைப்பற்றி அறிந்து கொள்வாய் என்று சொல்ல ஆரம்பித்தான்.

என உறவினன் சேதுபதி என்பவன் ரயில் நிலையத்திலுள்ள புத்தக கடையில் நாளிதழ்களை வாங்கி ஓடும் இரயிலில் ஐந்து வருடங்களுக்குமுன் விற்றுவந்தவன் நான்கு வருடங்களுக்குமுன் அவனே நாளிதழ்களயும் வார மற்றும் மாத இதழ்களையும் வாங்கி விற்றுவந்தான். மூன்று வரடங்களுக்குமுன் ரயில் நிலையத்தில் சொந்தமாக புத்தக்கடை திறந்தான். போன வருடம் ஊருக்குள்ளும் புத்தக்க கடை ஒன்றை திறந்தான். நேற்று
அவனைப்பார்த்தேன். இன்னும் ஓராண்டில் ஒரு பதிப்பகம் தொடங்க நினைத்திருப்பதாக சொன்னான் என்றான்.

“நல்லதுதானே. நல்லமுன்னேற்றம் தானே”
என்றான் உதயன்.

“இன்னொருத்தன் கதையையும் சொல்றேன் கேளு” என்ற கௌசிகன் பேசத் தொடங்கினான்.

இன்னொருவன் இவன் கொஞ்சம் தூரத்த்து சொந்தம். இரண்டு கிலோமீட்டருக்குள்ள இருக்கும். இவன் அவனைப்போல இல்ல. நல்ல தெய்வபக்கியுள்ளவன். கொஞ்சகாலமா சிவப்பு நிறவேட்டி சட்டையாக சுற்றித்திரிந்தவன் நாலைந்து வருடத்துக்கு முன்னால திடீரன்று கருப்பு வேட்டி சட்டைன்னு சுத்த ஆரம்பிச்சான். அப்புறம் இரண்டு மூன்று வருடத்துக்கு முன்னால மஞ்சள் வேட்டி சட்டைன்னு சுற்றிவந்தவன் போனவருடம் பார்த்தா வெள்ளைவேட்டியும் வெள்ளைச்சட்டையுமா சுற்றினான். இப்ப ஐந்தாறு மாதத்துக்கு
முன்னால ஆடையில்லாம இருக்கிறான். தப்பு தப்பு மன்னிச்சுக்க குறிப்பிட்ட நிறமென்ற ஆடையின்றி இருந்தான்.

“என்னப்பா சொல்ற. ஒரு சாமியையும் விடலையா?”

“ஏய் நான் என்ன சொன்னன் நீ என்ன சொல்ற”

“என்னப்பா நீ!  இதெல்லாம் இன்னன்ன சாமி கும்பிடறவங்க உடுத்தற யூனிபார்ம்னு எனக்கு தெரியாதா?”

“நீ என்னெத்த வேனுமின்னா நெனச்சுக்க. அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்ல. நான் சொல்றதமட்டுல் கேளு”

“சரி, சொல்லு”

“இரண்டு நாளைக்கு முன்ன பார்த்தேன். ஒரு ஆலமரத்துக்கு அடியில ஒரு கிளி சோசியக் காரனிடம் எதிர்காலம் பற்றி கிளிக்கிட்ட சொல்லி சீட்டு எடுத்து கேட்டுக்கிட்டு இருந்தான்.”

இப்ப சொல்லு எல்லாம் அவன் செயலா? அல்லது எல்லாம் அவனவன் செயலா? என்று கௌசிகன் கேட்டதும் அவன் கேட்டதால் குளிரடிக்கத் தொடங்கியதா அல்லது அருகே வந்து கொண்டிருக்கும் பனிமூட்டத்தால் குளிர்வது மாதிரி தெரிகிறதா என்பதை அவனால் உணரமுடியவில்லை. உதயன் சட்டைப்பாக்கெட்டில் இருந்த சிகரட் பாக்கட்டை எடுத்து நண்பனிடம் நீட்ட தானும் ஒன்றை பற்றவைத்தபடி புகையை ஊத முன்னாலே ஏற்பட்ட புகைமண்டலம்
அப்போது அங்க வந்துகொண்டிருந்த
பனிமண்டலத்துடன் சங்கமிக்க அந்த புகை மண்டலத்தில் யார் யாரோ தோன்றினார்கள்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *