முகநூல்

மறப்போம் மன்னிப்போம்!…. தரன் ஸ்ரீ.

நாம் யார் நமது வரலாறு என்ன எதை கடத்த போகிறோம் எமது அடுத்த தலைமுறைக்கு வரலாறு என்று சொல்லி.
நமக்குள் ஏன் இந்த பாகுபாடு ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லி குறை சொல்லி அன்றாடம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் வெறுமனே விமர்சனம் என்ற ஒரு வார்த்தையில்.எதை சாதிக்கப் போகிறோம் எமது இனம் சார்ந்து இந்த கசப்பான விமர்சனத்தால்.
இன்றைய இளைய தலைமுறையின் அரசியல் கருத்துக்கள் சிந்தனைகள் அவர்களின் விமர்சனத்துக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டியவர்கள் எமது அனுபவம் வாய்ந்த அரசியல் வாதிகளும் அரசியல் தெரிந்தவர்களும் மக்களுக்காக போராடிய எமது அனைத்து ஆயுதப்போராட்ட மக்கள் இனம் சார்ந்து தங்களை அர்ப்பணித்த அங்கத்தவர்களும் தான் காரணம்.
2009 க்கு முன் இருந்த நிலைப்பாடுகள் வேறு.அதன்பின் உருவாகிய இப்பொழுது இருக்கும் அரசியல் சார்ந்த நிலைப்பாடு வேறு ஆனால் நாம் தவற விட்டது என்ன.
இன்று 20 வயது இளைஞர் ஒருவர் கூட முகநூலில் நாட்டுக்காக மக்களுக்காக போராடிய ஒருவரை துரோகி ஒட்டுக்குழு கொலைகாரன் குற்றவாளி சுயநலவாதி இப்படி அனைத்து விதமான சொற்களையும் பயன்படுத்தி விமர்சிக்க முடிகிறது எப்படி.
ஆம் இன்று கடந்த கால வரலாறுகள் என்று சொல்லி எமது தமிழ் ஆயுத அமைப்புகளில் அனைத்து விதமான தமிழர்கள் சார்ந்த அனைத்து விதமான படுகொலைகள் துரோகங்கள் அனைத்தையும் நாங்கள் எழுதுகிறோம் கூறுகிறோம் உரையாடுகிறோம் பதிவு செய்கிறோம்.துரோகங்கள் சகோதர படுகொலைகளை அவர்கள் செய்தார்கள் இவர்கள் செய்தார்கள் இப்படி தகவல்களை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் புரிந்து கொள்வதற்காக பதிவு செய்கிறார்கள் அதிகமானவர்கள் ஆனால் இங்குதான் நாங்கள் தவறவிடுகிறோம்.எமது வரலாறு என்று சொல்லி எமது கசப்பான சம்பவங்களை வளர்ந்து வரும் சமூகத்தில் விதைத்து விடுகிறோம்.அவர்களும் அதை சுமந்து கொள்கிறார்கள் மனதில்.
அவர்கள் தான் இன்று எழுதுவார்கள் தமக்கு கிடைத்த தகவல்களை வைத்து.நீ துரோகி,நீ ஒட்டுக்குழு,நீ முன்னாள் போராளிகள்,நீ அப்படிப்பட்ட அரசியல்வாதி,நீ இப்படிப்பட்ட அரசியல்வாதி,நீ புலி,நீ புளட்,நீ ஈபிடிபி,உனது தலைவன் துரோகி,உனது நண்பன் துரோகி நீங்கள் அந்தக் கொலை செய்தீர்கள்,நீங்கள் இந்த கொலை செய்தீர்கள் இப்படி அதிகமாக உங்களிடமிருந்து அவர்கள் அறிந்து கொண்ட தகவல்களை வைத்து.இது அவர்களின் தப்பல்ல வரலாறு என்ற போர்வையில் கசப்பான அனுபவங்களை எழுதும் உங்கள் மீது இருக்கிறது தவறு.நிச்சயம் தமிழர் நலன் சார்ந்து பயணித்த அனைத்து மூத்த உறுப்பினர்களும் தவிர்த்துக் கொள்ளுங்கள் கசப்பான சம்பவங்களை.நீங்கள் கசப்பான சம்பவங்களை கூறுவதால் யாருக்குள் பிளவு தமிழ் மக்களுக்குள் எமது அடுத்த சந்ததிக்குள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் உண்மையாக ஒரு அமைப்பில் செயல்பட்டிருக்கலாம் மக்களுக்காக உங்களை அர்ப்பணித்து இருக்கலாம் போராடி இருக்கலாம் அந்த உண்மை அந்த அர்ப்பணிப்பு இப்பொழுது பெருமை அடைய வேண்டும் என்றால் உங்களுக்குத் தெரிந்த கசப்பான உண்மைகளை நிச்சயம் பதிவு செய்யாதீர்கள் உரையாடதீர்கள்.நீங்கள் கூறும் தகவல்கள் பதிவு செய்யும் கசப்பான சம்பவங்கள் மீண்டும் ஒரு கசப்பான சம்பவங்களை வார்த்தைகளை சிந்தனைகளை பதிவுகளை உருவாக்குகிறது எமது அடுத்த தலைமுறையிடம்.
நிச்சயம் நீங்கள் செயல்பட்ட அமைப்பு சார்ந்து மிகவும் பெருமதியான விடயங்களை பதிவு செய்யுங்கள்.ஒருவரின் தியாகமாக இருக்கட்டும் மரணமாக இருக்கட்டும் உங்களின் அர்ப்பணிப்பாக இருக்கட்டும் நிச்சயம் அது எமது அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டும்.ஆனால் இங்கு துரோகங்களும் படுகொலைகளும் எமது இனம் சார்ந்து விட்ட தவறுகள் நடந்து முடிந்த மறக்க முடியாத வலிகளை சுமந்த கசப்பான எண்ணங்களை எங்களுக்குள் புதைத்துக் கொள்ளுங்கள் தயவுசெய்து கசப்பான எந்த விடயங்களும் நமது அடுத்த சந்ததிக்கு இப்பொழுது கொண்டு போக வேண்டிய தேவை இல்லை.நீங்கள் கொண்டு போவதால் உங்களுக்கு எந்த வித தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை வெறுமனே மன ஆறுதல் மட்டும்தான்.
எமது போராட்டம் ஆரம்பிக்கப்படும் பொழுது ஆயுதப் போராட்டம் அல்லது அரசியல் போராட்டமாக இருக்கட்டும் ஆரம்பம் உண்மையாக இருந்தது. அதன்பின் இங்கு அரசியலும் சரி ஆயுதப் போராட்டமும் சரி உண்மைகள் இல்லை. தனிநபர் தலைமைகள் சார்ந்த கொள்கைகளும் எண்ணங்களும் மட்டும்தான் முதன்மை கொள்ளத் தொடங்கின அது அதிகம் என்று சொல்லலாம்.துரோகங்கள் படுகொலைகள் சுயநலம் சார்ந்துதான் பயணம் செய்திருக்கிறார்கள் அதிகமானவர்கள் தங்களை நிலைநிறுத்துவதற்காக.தவறுகள் செய்யாத அமைப்புகள் என்று எவரையும் இங்கு கொண்டு வந்து நிறுத்த முடியாது சரியான ஒரு அடையாளத்துடன்.
2009 க்கு முன் நடந்த அனைத்து கசப்பான சம்பவங்களையும் மனதுக்குள் மறைத்து நல் விடயங்கள் சார்ந்த வரலாறுகளை மட்டும்தான் இங்கு பதிவு செய்ய வேண்டும் கொண்டு செல்ல வேண்டும் இளைய தலைமுறையிடம்.இல்லை என்றால் எப்படி கடந்த காலத்தில் ஆயுதம் தாங்கி அதிக பிரிவுகள் அமைப்புக்கள் இருந்தனவோ அதே போன்று கையில் ஆயுதம் இல்லை அதிக கட்சிகள் உருவாகி கொண்டிருக்கிறது.நாங்கள் பல துண்டுகளாக உடைந்து செல்கிறோம் நமது இனம் சார்ந்து இப்பொழுது 50 கட்சிகள் இன்னும் 10 வருடம் கழித்து எத்தனை கட்சிகள் ஒவ்வொரு கட்சிகள் உருவாகும் பொழுது நாங்கள் தான் பின்னோக்கி செல்கிறோம் முன்னோக்கி அல்ல.எமது இனத்தின் நீண்டகால இருப்புக்காக இதைப் பதிவு செய்கிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர்களே உங்களுக்கு கிடைத்த பதவிகளை கொண்டு மக்களை வளப்படுத்த பாருங்கள்.நீங்கள் எதிர்பார்க்கும் மக்கள் சார்ந்த விடயம் நடைபெறாவிட்டால் அரசை விமர்சியுங்கள்.எங்களுக்குள் எங்கள் சார்ந்த இனம் சார்ந்த சக பாராளுமன்ற உறுப்பினரை உங்களின் இரத்த உறவுகளை இப்பொழுது நீங்கள் விமர்சிப்பதால் எதை காணப்போகிறீர்கள் சாதிக்கப் போகிறீர்கள் உங்களின் அரசியல் வாழ்க்கையில்.
ஒன்றை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் உங்களை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ததன் நோக்கம் மக்கள் நலன் சார்ந்து தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தான் அதை மறந்து செயல்படும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறார்கள் ஒவ்வொரு நாளும்.
முப்பது வருடத்துக்கு முன் 20 வருடத்திற்கு முன் நடைபெற்ற படுகொலைகளை நீ செய்தாய் அவன் செய்தான் அந்த ஆயுதக் குழு செய்தது இந்த ஆயுதக் குழு செய்தது என்று நீங்கள் சொல்லி இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு கடத்தி செல்கிறீர்கள் உங்களின் பரம்பரை அரசியலுக்காக.உங்களின் தனிப்பட்ட கருத்துக்கள் மக்கள் நலன் சார்ந்து இல்லை.நீங்கள் மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பவராக இருந்தால் சில விடயங்களை மறந்து மக்களின் பக்கம் நின்று மக்களின் சேவையை மட்டும் பாருங்கள். நீங்கள் இன்று மக்களின் பிரதிநிதி என்பதை நினைவில் வைத்து.
முகநூலில் பதிவு செய்யும் எமது இனத்திற்காக போராட வந்த தங்களை அர்ப்பணித்த தங்களை தியாகம் செய்த அத்தனை மூத்த வயது முதிர்ந்த அனைவரும் நீங்கள் முடிந்தவரை எமது அடுத்த சந்ததிக்கு நீங்கள் தான் இன்றைய ஆசான்கள் அது மறுப்பதற்கில்லை. நீங்கள் போற்றப்பட வேண்டியவர்கள் காலாகாலமாக உங்கள் அர்ப்பணிப்புகள் மதிக்கப்பட வேண்டியவை இங்கு எவரும் இதில் குற்றம் சொல்ல முடியாது.ஆகவே நல்ல விடயங்களை விதையுங்கள் எதிர்கால எமது அறுவடை மிகவும் சிறப்பாக இருக்கும் இது எனது எதிர்பார்ப்பு.
நிச்சயம் உங்களுக்கு அறிவுரை கூறும் வயது எனக்கு நிச்சயம் இல்லை.ஆனால் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் முடிந்தவரை தமிழ் அமைப்புகளுக்குள் நடந்த கடந்தகால படுகொலைகளை துரோகங்களை எமக்குள் புதைத்து வைத்துக் கொண்டு புதிய விதைகளை உருவாக்குங்கள் எமது மக்களுக்காக.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *