நிகழ்வுகள்

மருதூரின் மூத்த இலக்கியவாதிகள் ஐவருக்கு நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம், இமயம் கலை மன்றம் மற்றும் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் இணைந்து ஏற்பாடு செய்த மணிபுலவர் மருதூர் ஏ மஜீத், பன்னூலாசிரியர் நூறுல் ஹக், கலைமகள் ஹிதாயா றிஸ்வி, அதிபர் ஏ.கே.எம். நியாஸ், கவிஞர் யூ. எல். ஆதம்பாவா ஆகியோர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை சாய்ந்தமருது நைட்டா மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டார்.
மணிபுலவர் மருதூர் ஏ மஜீத் தொடர்பிலான நினைவுரையை எழுத்தாளர் ஏ.எம். பரக்கத்தும், கவிஞர் யூ. எல். அதம்பாவா பற்றிய உரையை கலைஞர் மருதூர் ஏ.எல். அன்சாரும் , அதிபர் ஏ.கே.எம். நியாஸ் தொடர்பிலான உரையை கவிஞர் எஸ். ஜனுஸும், பன்னூலாசிரியர் நூருள் ஹக் பற்றிய நினைவுகளை எழுத்தாளர் நவாஸ் சௌபியும், கலைமகள் ஹிதாயா றிஸ்வி தொடர்பிலான நினைவுரையை ஊடகவியலாளர் ஜுல்கா சரிபும் நிகழ்த்தினர்.
இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம், இமயம் கலை மன்றம், லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க், மருதம் கலைக்கூடல், அல் மீஷான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா, சிலோன் மீடியா போரம், கரைவாகு கலை இலக்கிய வட்டம், அம்பாறை ஊடக மையம் போன்றவற்றின் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாளிகைக்காடு நிருபர் – நூருல் ஹுதா உமர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *