நிகழ்வுகள்

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கல் விழா!

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் உலகத் தமிழ்ப்பேரினத்தின் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுக்கும் பொங்கல் விழா 12-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று விழாவைச் சிறப்பிக்கிறார்.
இவ்விழாவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் அனைவரும் குடும்பத்தினருடன் பங்கேற்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *