பலத்த குரலில் அரோகரா சொன்னாலும் அரசியல் தேர் நகரவே இல்லை!… ( கட்டுரை ) ….. ஏலையா க.முருகதாசன்

ஈழத்தமிழர்களின் அரசியல் எங்கே நிற்கிறது என்றால் நின்ற இடத்திலேயே நிற்கின்றது என்பதுதான் உண்மை.
எப்படி பார்த்தாலும் 72 வருடத் தமிழர்களின் அரசியல் நகர்வுகளை கண்கொட்டாமல் விழித்துப் பார்த்தாலும் அல்லது அக்கு வேறு ஆணி வேராகப் பிரித்துப் பார்த்தாலும் விடை ஒன்றாகவே இருக்கின்றது.
அந்த விடைக்கு உதாரணமாக தேர்த்திருவிழாவைச் சொல்லலாம்.தேரை வீதி உலாவிற்குக் கொண்டு வரவேண்டுமென்றால் வடக்கயிறை ஒரே திசையில் இழுக்க வேண்டும்.கொஞ்சப் பேர் வடக்குத் திசையிலிருந்தும் இன்னும் கொஞ்சப் பேர் திற்குத் திசையில் நின்றும் இழுத்தால் தேர் நகரவே நகராது.
எப்படித்தான் பக்தர்கள் அனைவரும் ஒரே குரலில் வானை முட்டுமளவிற்கு அரோகரா சத்தத்தை எழுப்பினாலும் தேர் நின்ற இடத்திலேயே நிற்கும்.நமது அரசியல் தேரும் கிட்டத்தட்ட 72 வருடங்களாக நின்ற இடத்திலேயே நிற்கின்றது.
பலபல கட்டங்களாக பலவிதமான அரசியல்வாதிகள் வந்து அங்குமிங்கமாக வடக் கயிற்றைப் பிடித்து இழுத்த போதும் அரசியல் தேர் நகரவே இல்லை.
இலங்கை அரசாங்கங்களும் கல்லுளி மங்கனாக ஒன்றுமே விளங்காத மாதிரி இவர் என்ன கேட்கிறார்கள் என்று பிடரியைச் சொறிந்து கொண்டு நீங்கள் கேட்பது ஒன்றுமே விளங்கவில்லை என்பது போல போய்க் கொண்டிருக்கிறார்கள்.
பௌத்த சிங்கள இனவாதிகளும் பௌத்த துறவிகளும் பௌத்தத்திற்கு எதிராக இனத் துவேசம் பேசிக் கொண்டு இலங்கையை தாமே மண் போட்டு மேடாக்கி இந்து சமுத்திரத்திற்குள் உருவாக்கியது போல அரசியல் சண்டமாருதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சிங்கள அரசியல்வாதிகள் காலத்திற்கேற்ப தமது அரசியல் நகர்வுகளை புதுப்பித்துக் கொண்டு வெளிநாட்டுக் கொள்கையில் யாரையெல்லாம் நண்பனாக்க வேண்டுமோ நண்பனாக்கிக் கொண்டும் சில நாடுகளோடு தமது அபிவிருத்திக்காக நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்பது போல கழுவின மீனிலை நழுவின மீனாக நடந்து கொள்கிறார்கள்.சரியாக அரசியலைச் செய்து வருகிறார்கள்.
சீனாவை எப்படிக் கையாள வேணடும் இந்தியாவை எப்படிக் கையாள வேண்டும் அமெரிக்காவை எப்படிக் கையாள வேண்டுமென்பதை சிங்கள இராஜதந்திரிகள் தெளிவறத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
எமது உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டமே அதிக வலிமை உள்ளதாக எண்ணப்பட்டதும் தியாகங்கள் மிகுந்ததாகவும் கருதுவதில் மாற்றுக் கருத்தும் இல்லை.
எனினும் அதற்காக அறவழிப் போர்த் தியாகங்களை சாதாரணமாக எடுத்திட முடியாது.அவையும் தியாகங்கள் மிகுந்தவையே.
அவை எவையாக இருந்தாலும் அவை மட்டுமே ஈழத்தமிழரின் அரசியல் நகர்வுக்கு போதுமானவையல்ல.
ஈழத்தமிழர்கள் பல இடங்களில் முட்டாள்தனமாகவும் அலட்சியமாகவும் இருந்துள்ளனர்.புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து ஈழத்தமிழர்களை வழிநடத்த முயற்சித்த புலம்பெயர் அரசியல் அறிவாளிகள் என தம்மைக் கூறிக் கொள்வோர்.சோறு முக்கியமில்லை உரிமைதான் முக்கியம் என்று உசுப்பேத்தினார்கள்.
உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும், இருக்க வீடும், உடுக்க உடையும் வேணுமென்பதுகூட சுதந்திரத்தின் ஒரு அலகுதான்.அபிவிருத்திகளும் உரிமையின் அலகுதான்.
இருக்கிறதைப் பிடிக்காமல்: பறக்கிறதை பிடிக்க நினைத்த கதைதான் வடக்கு கிழக்கு இணைவை இந்தியா ஏற்றுக் கொண்டு தந்த போது ஏற்றுக் கொள்ளாமல் தனிநாட்டு ஆசையில் போட்டுடைத்த கதையாகும்.
இந்தியா பக்கத்து நாடு என்பதற்காக அது சொல்வதையெல்லாம் கேட்க வேண்டுமென்ற அவசியமில்லை.இந்தியா ஏற்றுக் கொண்டதை வாங்கிக் கொள்வதற்காக இந்தியாவிடம் எடுத்ததற்கெல்லாம் ஓடிப் போய் ஐயா எஜமான் சொல்லுங்கோ என்று வாய் பொத்தி கைகட்டி நிற்க வேண்டிய அவசியமே இல்லை.
ஒரு அணியாக இருக்க வேண்டிய சிங்களவர்களையும் தமிழர்களையும் வெட்டுப்பகை குத்துப் பகை எதிரிகளாக்கியவர்கள் இந்திய அரசியல்வாதிகளே.இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரங்களுக்கும் இந்தியாதான் காரணமோ எனச் சந்தேகம் கொள்வதில் சந்தேகப்பட வேண்டிய அவசியமே இல்லை.
தூண்டுவதும் தூண்டியதனால் ஏற்படும் ஒரு விளைவினை இனத்துவேச வழியாக ஆக்ரோசம் கொள்ள வைப்பதும் எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றியது போல ஆக்ரோச வழியால் இனத்துவேசத்தை மேற்கொள்ள வைத்ததும் இலங்கையில் ஊடுருவிய இந்திய உளவு நிறுவனங்களோ எனச் சந்தேகம் வலுக்கின்றது.
ஆனால் ஈழத்தமிழர்களும், ஈழத்தமிழர்களுக்கான அரசியல்வாதிகளும் இந்தியா தமிழர்களுக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள் என்று நம்புவதுதான் பெரிய முட்டாள்தனம்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி போராளிக் குழுக்களை வளர்த்து இலங்கை அரசிற்கு தொல்லை மேல் தொல்லை கொடுக்கு வைத்து பிறகு மீள முடியாத அளவிற்கு இலங்கையின் பொருளாதாரத்தைச் சிதைத்து பிறகு போராடிய தமிழர்களுக்கு உயிர்ச்சேதம் பொருட் சேதங்களை ஏற்படுத்தி வளமாக வாழ்ந்த ஈழத்தமிழனை ஏதிலியாக்கி பிறகு இந்திய உளவு நிறுவனத்தின் சுதேசிய ஒற்றர்களை ஒவ்வொரு போராளிக் குழுக்களுக்குள்ளும் புகுத்தி அவர்களையெல்லாம் சகோதர விடுதலைக் குழுக்களினால் அழிக்க வைத்து அழிப்பைச் செய்த போராளிக் குழுவை விஸ்வரூபமாக வளரவைத்து அவர்களை அடியோடு அpழப்பதற்கு இலங்கை அரசிற்கு துணை போய் இவ்வாறு இரண்டு இனங்களையும் பகையாக்கிய இந்தியாவை ஈழத்தமிழர்கள் அரசியலில் அவர்களை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைத்திருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு இலங்கை ஒரு விளையாட்டு மைதானம். அவர்கள் சிங்களவர் தமிழர்களை இரு அணியாக பிரித்து எதிரியாக்கிவிட்டார்கள்.
எல்லாக் காலத்திற்கும் ஈழத்தமிழர்கள் தமக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியத் தூதுவரின் பணிமனை ஈழத்தமிழரின் செயல்பாடுகளை நோட்டமிடுவதற்கும் அதனைக் கையாள்வதற்குமே.ஒரு வேளை இந்தியாவிற்குப் போவதற்கு விசா எடுப்பது பிரயாணச் செலவோ அலைச்சலோ இல்லாமலிருக்கலாம்.அது சாதாரண ஈழக்குடிமகனுக்கு மகிழ்ச்சியானதாகவும் இருக்கலாம்.
ஆனால் ஈழத்தமிழரின் நத்தை வேக அரசியலை அவர்களே தீர்மானிக்கிறார்கள்.தமிழர் சார்பாக அரசியல்வாதிகளில் சிலரைத் தம்மைத் தேடி வரவைக்கிறது இந்த இந்தியத் தூதரகப் பணிமனை.
இது ஒரு புறமிருக்க எமது ஆயதப் போராட்டத் தியாகத்தையும் மாவீரர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரனையும் பணயக் கைதிகள் போல அவர்களைச் சொல்லியும் நினைவு கூர வைத்தும் அரசியல் செய்தால் ஈழத்தமிழர்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என நினைக்கிறார்கள்.
மாற்றுச் சிந்தனையாளர்களின் அரசை அணுகும் அணுகுமுறைக்கு அதைச் சொல்லியே தடை போடுகிறார்கள்.இலங்கை அரசாங்கத்தை அணுகுவதற்கு கடந்த கால அரசியலோ ஆயுதப் ஆபோரட்டமோ சமகால அரசியலுக்கு ஒரு போதும் துணை போகாது.ஏனென்றால் இலங்கை அரசை உற்றுக் கவனித்தால் நீங்கள் சொல்வதைச் சொல்லிக் கொண்டிருங்கள் நாங்கள் செய்வதைச் செய்து கொள்வோம் எனத் தம் பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஈழத்தமிழரின் வரலாற்று நூல்களில் மாவீரர்களின் தியாகங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரனின் வீரமும் வரலாற்று நூலகளாக வெளிவர வேண்டுமே தவிர அது மட்டும் எமது அரசியலுக்கு போதவே போதாது.

இலங்கை சிங்கள அரசியல்வாதிகளின் இராஜதந்திரத்தை கவனிக்காத அரசியல் ஒரு போதும் வெற்றியளிக்காது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக வந்த போது அவர் ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்பதையோ, தமிழ் சிங்கள எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கும் அவர் தலைவர் என்புதையோ எம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையென்றால் நாம் அரசியலில் பூஜ்யமே.
ஆமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைத் துரோகியென்கிறோம்.ஆனால் அவரின் கட்சியை ஆதரித்து இருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தமிழர்களை நாம் துரேகியென்றா சொல்லப் போகின்றோம்.
இரண்டு உதைபந்தாட்டக் குழுவினர் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடி ஒரு அணி தோற்றுப் போனால்,தோற்றுப்; போன அணி வென்றவர்கள் வெல்வதற்குக் காரணம் என்ன என்பதையும், வென்றவர்கள் ஏன் தம்மிடம் அவர்கள் தோற்றார்கள் என்பதையும் ஆய்வு செய்து தம்மைத் திருத்திக் கொள்ளும்.
அல்லது தோற்ற அணியின் பலவீனத்தை தமக்குச் சாதகமான பலமாக உள்வாங்கிக் கொள்ளும்.திரு.டக்ளஸ் தேவானந்தா ஏன் வென்றார் எப்படி வென்றார் என்பதையும் யோசிப்பதே அரசியலாகும்.துரோகிகள் என்று சொல்வதோ சொல்லிக் கொண்டிருப்பது மட்டுமே அரசியலாகாது.
அண்மையில் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்ற விசாரணைக்காக ஒல்லாந்து நீதிமன்றத்தில் நிறுத்துவேன் எனச் சொன்னதாக ஒரு இணையத்தளம் செய்தி வெளியிட்டது.
அவர் சொன்னது உண்மையானால் ஏதாவது தான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமென்பதற்காகவும் மக்களை புளகாங்கிதம் அடைய வைப்பதற்காகவுமே இதைச் சொல்லியிருக்கிறார்.
![]()