கவிதைகள்
வரந் தருவாய் முருகா!… ( கவிதை ) கவிஞர் காதேவ ஐயர் ஜெயராமசர்மா.

வரந் தருவாய் முருகா – வாழ்வில்
நிரந் தரமாய் உன்னை
நினைந்துமே நான் வாழ
வரந் தருவாய் முருகா ![]()
சிரமேறும் ஆணவம் குறைத்திடுவாய் – வாழ்வில்
மரமாக இருப்பதையும் ஒழுத்திடுவாய்
உணர்வோடு உனைநினைக்க உதவிடுவாய் – என்றும்
உயிர்ப்போடு வாழ்வதற்கு அருளிடுவாய் ( வரந்தருவாய் முருகா )
குறைகூறும் மனமகல உதவிடுவாய் – வாழ்வில்
கறையுள்ள செயலனைத்தும் களைந்தெறிவாய்
திறலுடை பெரியோரை இணைத்திடுவாய் – என்றும்
மறவாமல் உனைத்துதிக்க வரமருள்வாய் (வரந்தருவாய் முருகா )
மாறுபடு சூரரினை திருத்தியவா – வாழ்வில்
வேறுமுகம் அமையாது காத்திடுவாய்
காரிருளை கருணையினால் களைந்திடுவாய் – என்றும்
கரிசனைய என்மீது காட்டிடுவாய் ( வரந்தருவாய் முருகா )
![]()