கவிதைகள்
வழியொன்னு சொல்லு தம்பி!… சங்கர சுப்பிரமணியன்.

மந்தவெளியில நின்னுகினு
மல்லாந்து வானத்த பாத்துக்கினு
மலபார் பீடிய வளிச்சுக்கினு
வாழும் வாழ்க்க போயிடுச்சே 
குட்டிச் சுவரண்ட குந்திக்கினு
முட்ட குடுச்சு கவல மறந்துகினு
கட்டாந் தரயில துண்ட விரிச்சு
வெட்டுடா அந்தால மூனு சீட்டு
கவர்மெண்ட் துட்ட வாங்கிக்க
கசமாலம் எதுவந்த நமக்கென்ன
௭ன்னால எவனுக்கு கொறவுங்க
உன்னால நாகெட்டா என்னாலநீ
மங்காத்தாஆடலாம் வாடா தம்பி
எங்காவது போயும் வாந்துடலாம்
பொட்டிய தூக்கிக்கினு போலாம்
பொடிநடயா ஊருபக்கம் ஒதுங்க
ரயிலயும் ஒயுங்கா உடமாட்டான்
கடனும் எவனும் தரமாட்டான்
வீட்டுக்காரன் சும்மா விடுவானா
வெவரமா வழிய சொல்லு தம்பி!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()