கவிதைகள்

வருவது வரட்டும் துணிந்து நிற்போம்!… சங்கர சுப்பிரமணியன்.

எத்தனை நாள்தான் கொரொனாவை எண்ணிப் புலம்புவது
இத்தனை நாள் எண்ணி நாம் புலம்பியதும் போதாதா
உறவுகள் மரித்தாலும் உருகி அழுவதுதான் எத்தனை நாள்
காரியம் முடிந்தவுடன் அவரவர் கடமையாற்ற சென்றிடுவார்

ஊரடங்கு சமூக இடைவெளி முகக் கவசமென
அவரவர் தம்மை பாதுகாத்து அடுத்ததென்ன என உணர்ந்தார்
வந்த இடத்தில் வேலை இல்லை
என்றுணர்நது
சொந்த ஊர் சென்று ஏதாவது செய்வோமென புறப்பட்டு விட்டார்

விழுந்து ஆயிரமாயிரமாய் மாண்ட நாட்டிலெலாம்
எழுந்து வேலைசெய்யத் துவங்கிவிட்டார்
வேலையின்றி உணவின்றி பட்டினிச்சாவை விட
துணிந்து வெளியே வரவும் துணிந்துவிட்டார்

மருந்து கண்டுபிடிக்கும் வரை வாழ்வை முடக்காமல்
இருந்து இருந்து வீட்டில் மனநோயால் மாளாமல்
வருந்தும் நிலை இருந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு
திருந்திய மனதோடு தெளிவுக்கு வந்துவிட்டார்

விதிமுறைகள் கடைபிடிப்போம் வென்றிடுவோம் கொரொனாவை
இன்னும் ஒரு ஆண்டு கொரோனா இருக்குமெனில்
ஓராண்டும் அழுது புலம்பி நாமும் நம்பிக்கையற்று
ஏனையோரையும் நம்பிக்கை குறைய விடமாட்டோம்

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவாரோ மீண்டும் மாநிலத்தே
கொரோனாவை எண்ணி எண்ண  மாளும் பயம்விட்டு
வருவது வரட்டுமென துணிந்து நிற்போம்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *