Vic-Lanka Covid Aid காணொளி நிகழ்ச்சி!… ( வீடியோ )

விக்ரோரியா மாநிலத்தில் வதியும் இலங்கை மக்கள், சமகாலத்திய COVID-19 காரணிகளின் நிமித்தம் எதிர்நோக்கும் நெருக்கடிகள், உளவியல் பாதிப்பு, தொழில் சார்ந்த பிரச்சினைகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் தேவைகள், சேவைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து பெறவேண்டிய ஆலோசனைகளுக்கு உதவும் பொருட்டு உருவாக்கப்பட்ட Vic-Lanka Covid Aid என்னும் அமைப்பினால், அண்மையில் மெல்பன் விஸ்வவாஹினி தொலைக்காட்சியின் அனுசரணையில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் காணொளி நிகழ்ச்சியின் நான்காம் பாகத்தினை இத்துடன் இணைத்துள்ளோம். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான லெட்சுமணன் முருகபூபதி, சமூகப்பணியாளர்களான நளினி காசிநாதர், கணேசன் சிவா, அந்தனி கிறேசியன் ஆகியோர் கலந்துகொண்டனர். எமது சமூக மக்களின் தேவைகளுக்காக Vic-Lanka Covid Aid முன்னெடுத்துவரும் பணிகளைப்பற்றிய விளக்கங்கள் இக்காணோளி நிகழ்ச்சியில் தமிழில் தரப்பட்டுள்ளது.

![]()