கவிதைகள்
என் உயிர் என்னிடமே!…. கவிஞர் ந.க.துறைவன்.

என் உயிர் என்னிடமே
உள்ளுறைந்து வாழ்கிறது
அது எங்கு வாழ்கிறதென்று
எனக்கும் தெரியாது
அதற்கும் தெரியாது
கண்ணுக்கு தெரியாமல்
எங்கோ மறைந்துள்ளது
இரகசியமாய்
என் உயிர் பற்றி
எனக்கும் அக்கறை உண்டு
மற்றவர்க்கும் அக்கறை உண்டு
உயிர் மெய்
உயிர் இருந்தால் வாழ்வு
உயிர் பிரிந்தால் சாவு
இதுவே
மனித வாழ்வின்
இறுதி தீர்வு.
நக துறைவன்.
![]()