கவிதைகள்

தொழிலுமில்லை பணமுமில்லை!…. சங்கர சுப்பிரமணியன்.

தொழிலுமில்லை பணமுமில்லை
ஒன்றுமேயில்லை
தொழிலுமில்லை பணமுமில்லை
ஒன்றுமேயில்லை
எந்த நாளும் தனிமை கண்டால்
கொரோனா இங்கில்லை
எந்த நாளும் தனிமை கண்டால்
கொரோனா இங்கில்லை
நமக்கு வேறே வழியில்லை
தொழிலுமில்லை பணமுமில்லை
ஒன்றுமேயில்லை

எனது தொழிலில் பெற்ற இன்பம்
எங்கே மறைந்தாயோ
போட்டுவைத்த திட்டமெல்லாம்
தகர்ந்தே பாழானதே
போட்டுவைத்த திட்டமெல்லாம்
தகர்ந்தே பாழானதே
என் கனவும் வீணானதே
எனது தொழிலில் பெற்ற இன்பம்
எங்கே மறைந்தாயோ

சமூக இடைவெளி மறந்து போனால்
வாழ்வு நமக்கேது
சமூக இடைவெளி மறந்து போனால்
வாழ்வு நமக்கேது
வாழ்வை முடிக்கும் கொரோனா அதுபோல்
துன்பம் வேறேது
வாழ்வை முடிக்கும் கொரோனா அதுபோல்
துன்பம் வேறேது
இழக்க முடியா வாழ்வின்மீது பற்றும் போகாது
அது என்றும் மாறாது
தொழிலுமில்லை பணமுமில்லை
ஒன்றுமேயில்லைஇந்த நாளும் கடந்து போகும்

அந்த நாளும் வரும்
இந்த நாளும் கடந்து போகும்
அந்த நாளும் வரும்
கண்ட துன்பம் எல்லாம் பறந்து
நம் காலம் கனியாகும்
கண்ட துன்பம் எல்லாம் பறந்து
நல் காலம் கனியாகும்
இந்த துன்பம் என்றும் இதுபோல்
ஒரு நாளும் இருக்காது
அது இனியும் நிலைக்காது
எனது தொழிலில் பெற்ற இன்பம்
எங்கே மறைந்தாயோ
எந்த நாளும் தனிமை கண்டால்
கொரோனா இங்கில்லை
நமக்கு வேறே வழியில்லை!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *