கவிதைகள்

செம்மொழியின் இனிமை!…. சங்கர சுப்பிரமணியன்.

தமிழ் நமக்கு உயிர்
தமிழ் நமக்கு மெய்
அது முற்றிலும் உண்மை 
உண்மையில் உயிரும்
மெய்யில் இருப்பதால்

தமிழ் நம் மெய்க்கு உயிர்
தமிழ் நம் உயிருக்கும் மெய்யாம்
தமிழ் நமக்கு உயிரும் மெய்யும்
தமிழ் என்ற சொல்லின்
பொருளை அறிய சிறப்பாகும்

உயிரும் மெய்யும் சேர்ந்த முதல்
உயிர்மெய் எழுத்தில்
உயிர் எழுத்து அகர குறிலும்
மெய்யெழுத்து வல்லினமாம்

இரண்டாம் உயர்மெய் எழுத்தில்
இரண்டாம் உயிரெழுத்து குறில்
மெய்யேழுத்து மெல்லினமாம்

கடைசி மெய்யெழுத்தில்
அவ்வெழுத்து இடையினமாயும்
தமிழின் சிறப்பு ழகரமாயும் நின்று
உயரிய தமிழென ஒங்கியுரைத்து
செப்புகிறது செம்மொழியென்று
செருக்குடன் சிறந்ததென்றே

அத்தகு செவ்விய நற்றமிழை
தமிழ் தமிழென தடையின்றி கூற
அமிழ்தமிழ்தென அமிழ்தாவதால்
தமிழ் இனிதென இன்புறுவோம்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *