கவிதைகள்

இணையம் இல்லை என்றால் இன்று!… தம்பி நந்தன்.

கண்ணெதிரே தோன்றாத
வில்லன்
காதருகே வந்து கதை பேசாத
கஜவன்
தூர நின்று கழுத்தறுக்காத துரோகி
மூச்சோடு முட்டி மோதி
நாசி வரை சென்று
குடி கொண்டு
மெல்ல மெல்ல நெஞ்சில்
வீடு கட்டும் விரோதி

திட்டங்களை சிதைத்த பாதக(கி) ன்
ஆயுதங்கள் செய்யாத அழிவை
குண்டுகள் சிதறி தசை குவியல்
இல்லாமல்
இரத்த ஆறு பெருக்கு எடுக்காமல்
நச்சென புகுந்து
குடி கெடுக்கும் விற்பனம்

சொல்லாமல் கொல்லும்
சொற்பனம்

சொல்லி வைத்த திருமணம்
நாள் குறித்த புது வீடு
ஊர் எல்லாம் அழைப்பு வழங்கப்பட்ட மஞ்சள் நீராட்டு விழா
பதின் எட்டாவது பிறந்தநாளுக்கு
பதின் ஏழு வயதில் முற்பதிவு செய்த மண்டபம்

பொன் முடி சூடிய கோபுரம்
பொற் சுடரோன் திருவிழா

தேன்னகத்தே இருந்து நூறு யானை
காசியிலே இருந்து அந்தணர்

இலட்சம் மோதகம் கொண்டு படையல்
கோடி தேங்காய் உடைப்பு

அயல் நாட்டில் இருந்து ஆடவர்
பாடகர்
நாட்டிய அலங்காரம் நடன சிகாமணி

எத்தனை எத்தனை எண்ணங்கள்
தினமும் யாவும் பாத்திருக்க தீயில்
சங்கமம்

காற்றில் வரும் கீதம் பேசாமல் காவிச் செல்கிறதே கானகம்

ஆடிய ஆட்டம் என்ன கொலோச்சிய தோற்றம் தான் என்ன

சக மனிதரை ஏறி மிதித்த மிடுக்கு என்ன
ஊர் குழந்தை பட்டினி கிடக்க உன் குழந்தை பீட்சா, பேர்கர், சிக்கன் கால் புசித்த மந்திரம் என்ன

எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு
அதனால்தான் என்னவோ தண்ணீரும் மூன்று முறை பொறுக்கும் என்றார்கள்
நெருப்புக்கு அதுவும் தெரியாது

சுனாமியாக, சூறாவளி யாக, பூமி அதிர்ச்சியாக சீறி எழுந்த போதெல்லாம் அடுத்த நாளே நாம் கடமை மறந்ததன் மடமை

இன்று பார் இணையம் மட்டும் இல்லை என்றால் இந்த உலகம் எப்படி சேடம் இழுத்திருக்கும் என்று

கறையான் அறுப்பது போல் ஒரு பக்கம் அழிய வீட்டில் இருந்து விசர் பிடித்து பல கோடி பேர் மனிதனை மனிதன் அடித்தே கொன்று இருப்பான்

இணையம் இருப்பதால் ஏதோ தம்மை மறந்து பொய் உலகில்
தேறாத வாழ்வு தொடர்கிறது

இணையமும் மின்சாரமும் நின்று போனால்…..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *