கவிதைகள்

கொரோனாவும் நண்பனும்!.. சங்கர சுப்பிரமணியன்.

அந்தநாள் ஞாபகம் வந்ததேன் நண்பனே 
இந்த நாள் மாறிட கொரோனா காரணம் நண்பனே
கல்லூரி என்றும் கோவில் என்றும்
ஒன்றாய் சுற்றிய நாட்கள் நினைவில் சுற்றுதே

ஓடி அவள் பின் தொடர்தேன்
ஒருவழியாய் காதலை ஏற்றுக்
கொள்ள
ஒற்றை ரோஜா கொடுக்க சென்றேன்
ஊரடங்கு  சட்டம் வந்து அது
தடைபட்டதே

ஊரோரம் உடைந்து நிற்கும்
குட்டிச்சுவர் மீதில் உட்கார்ந்து
இருட்டும்வரை ஊர்க்கதை பேசி
ஒன்றாய் கும்மாளமிட முடியலையே

ஊர்சுற்றி பொறுபற்றிருந்தோம்
உணர்ந்து விட்டோம் வாழ்வின் அர்த்தமதை
இன்பத்திலே இவ்வுலகை மறந்து இருந்தோம்
இந்த கரோனாவினால் நல்ல பாடம் கற்றோம்

வீட்டினிலே அடைந்து கிடந்தாலும்
விவேகமாய் எதையாவது நாம் சிந்திப்போம்
நண்பனே நாளை விடியுமென காத்திருப்போம்
நம்மைவிட்டு கொரோனாவும் ஓடிப்போம் என்றிருப்போம்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *