வெளி நாடு!… தம்பி நந்தன்.

கிராமத்தில் தோட்ட
வெளிகளில்
வயல் சேறுகளில்
தேங்கி நின்ற மழை 
வெள்ளத்தில்
பல நூறு பேர் நீராடிய
குளத்தில்
பல குவியல்
அழுக்கு துணிகள்
அலசிய வயல் நீரில்
நாள் முழுக்க
மூழ்கி நீர் முழுங்கி
எழுந்த போது
தாக்காத கிருமி
தினம் பல தடவை
கை கழுவி
நாளுக்கு இரு தடவை
சுடு நீரில்
நீராடி
வீடு பெருக்கி
வாரமொரு முறை
தொற்று நீக்கி மருந்து
இட்டு
வீட்டிற்குள் நடப்பதற்கு
பாதணி
வெளியே நடப்பதற்கு
காலணி
கையுக்கு கையுறை
வாயுக்கும் மூக்குக்கும்
முக மூடி
தொற்று நீக்கி
இத்தனையும் இருந்து
என்ன பயன்
ஊரில் இல்லாத கிருமி
முழுக்க வெளிநாட்டில்
பெருக்கம்
என்ன புரிகிறது
எவ்வளவு சொர்க்கம்
என்றாலும்
நம்ம ஊரை போல வருமா
நான் பிரான்ஸ் குடிமகன்
என்று வரிக்கு வரி
சொன்ன நாக்கு
இப்போ மாறி
சொல்கிறது
இந்த கிருமி
ஊர் அடங்கு
எல்லாம் முடியட்டும்
ஊருக்கு ஓடி போய்
விடுவோம் என்று
ஒன்று புரிகிறதா
ஊரில் நீங்கள் வருவதற்கு
நீ இப்போ இலங்கை
பிரைஜை இல்லை
வந்தாலும் திரும்ப
நீ அங்கே தான்
போக வெண்டும்
என்றார்
அப்பாத்தா
ஓடமும் ஒரு நாள்
வண்டியில் ஏறும்
வண்டியும் ஒரு நாள்
ஓடத்தில் ஏறும்
இது பாருங்கள்
கிருமி தந்த
உறுமி…
![]()