கவிதைகள்

கொரோனாவும் உறவுகளும்!… சங்கர சுப்பிரமணியன்.

வீடுநோக்கி ஓடிவந்த என்னையே
கூட முடியாது போனதுண்மையே
பிரிந்துபோன உறவுகளும் சேருமோ
கொரோனாவால் வந்தநிலை
மாறுமோ

சில உறவுகளோ என்றும் சேராது
விரும்பினாலும் சேர்த்துவைக்க
முடியாது
ஆசையாக நாம் அழைக்க முடியாது
அவ்வுறவு சொல்லும் கொரோனா காலம் இதுவென்று

உறவுகளே உண்மைநிலை உணருங்கள்
ஒருபோதும் தவறென்று எண்ணாதீர்
தனித்திருப்பது வேண்டுமென்று அறிகின்றோம்
தவறென்று நினைக்க மாட்டீர்
புரிகிறோம்

பிறந்தநாள் பண்டிகை எனபல வந்திடும்
நாம் கூடியது கொண்டாடியது வலம்வரும்
அந்த நினைவுடன் நாங்களின்று
வாழ்கிறோம்
வரும் காலமதில் நாமிணைந்து
கொண்டாடுவோம்

உற்றாரே உறவினரே கேளுங்கள்
தற்போது நடப்பதெலாம் மாறிடும்
அற்புதமாய் அந்தநாளும் மலர்ந்திடும்
சொற்பகாலம் மட்டும் காத்திருப்போம் வாழ்விலே!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *